குல்பூஷண்

டில்லி:

ளவு பார்த்ததாக பாகிஸ்தானில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குல்பூஷண் ஜாதவ் குறித்த தகவல் எதையும் அந்நாடு அளிக்கவில்லை என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டில்லியில் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் பாக்லே இது குறித்து இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர், “ குல்பூஷண் ஜாதவை, இந்திய  தூதரக அதிகாரிகள் சந்திக்க 16 முறை

பாக்லே

அனுமதி கேட்டும் பாகிஸ்தான் அரசு மறுத்துவிட்டது.  குல்பூஷண் ஜாதவின்  தாயார் அளித்த மனு குறித்தும் தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.

குல்பூஷண் ஜாதவ் எங்கு வைக்கப்பட்டுள்ளார்  என்றோ  அவரது உடல்நிலை குறித்தோ தகவல் அளிக்க பாகிஸ்தான் மறுத்துவருகிறது.  குல்பூஷண் ஜாதவின் குடும்பத்தினர் பாகிஸ்தான் செல்லவும், அந்நாடு விசா வழங்க மறுத்துவருகிறது” எனறு தெரிவித்தார்.

இதையடுத்து குல்பூஷண் ஜாதவை பாக் ராணுவம் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் மேலும் வலுத்துள்ளது.