டெல்லி

யோத்தி வழக்கில் எங்கள் மனுவைத் தள்ளுபடி செய்திருந்தாலும், எங்கள் கோரிக்கை ஏற்பட்டு உள்ளது. இதனால் நாங்கள்  சமாதானம் அடைகிறோம் என நிர்மோகி அகாரா நிர்வாகி மகந்த் தர்மதாஸ் தெரிவித்துள்ளார்.

அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு கூறிய உச்சநீதி மன்றம்,  சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம், அந்த இடம் இந்துக்களுக்கு சொந்தமான என்று கூறியது. மேலும், இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் நிலத்தை மத்திய அரசும், உத்தரப் பிரதேச அரசும் வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பின்போது, தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய், வழக்கு சம்பந்தமாக  நிர்மோகி அகாரா அமைப்பு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்வதாக கூறினர்.

இதுகுறித்துக் கருத்து தெரிவித்துள்ள நிர்மோகி அகாரா நிர்வாகி மகந்த் தர்மதாஸ்,  ”அயோத்தி வழக்கில் எங்கள் மனுவைத் தள்ளுபடி செய்ததால் வருத்தமில்லை. எனினும் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்ற எங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டு விட்டதால் சமாதானம் அடைகிறோம்” எனக் கூறியுள்ளார்.