போலி நிறுவன இயக்குனர்களை கெய்ரோவுக்கு இடம் மாற்றிய நிரவ் மோடி

மும்பை

ங்கி ஊழலில் ஈடுபட்ட வைர வியாபாரி நிரவ் மோடி தனது போலி நிறுவன இயக்குனர்களை கெய்ரோவுக்கு இடம் மாற்றி உள்ளார்.

பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி வங்கியில் கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளதாக சிபிஐ விசாரித்து வருகிறது.   சிபிஐ விசாரணைக்கு பயந்து அவர் தனது குடும்பத்தினர் மற்றும் கூட்டாளியுடன் நாட்டை விட்டு ஓடி விட்டார்.   அவரை மீண்டும் இந்தியா கொண்டு  வர சிபிஐ முயற்சி செய்து வருகிறது.

திவ்யேஷ் காந்தி

இந்நிலையில் நிரவ் மோடியின் நிறுவனம் ஒன்றின் இயக்குனரான திவ்யேஷ் காந்தி, “நிரவ் மோடி தனது நிறுவனத்தின் சார்பில் ஹாங்காங்கில் பல போலி நிறுவனங்களை நடத்தி வந்தார்.   அவருக்கு வேண்டியவர்கள் அந்த நிறுவந்த்தில் பெயருக்கு இயக்குனராக இருந்த வந்தனர்.   அவர்கள்  பெயரை பயன்படுத்தி நிரவ் மோடி பல மோசடிகளைச் செய்துள்ளார்.

இந்த மோசடி குறித்து சிபிஐ விசாரிக்க தொடங்கியதும் அவர் அந்த போலி நிறுவன இயக்குனர்களை கெய்ரோவுக்கு கொண்டு சென்று விட்டார்.   இந்த நிறுவனங்கள் அனைத்தையும் அவர் கூட்டாளி மெகுல் சோக்சி நிர்வகித்து வந்தார்.    பல இடங்களில் இந்த நிறுவனங்கள் செயல்பட்டதாக சொல்லப்பட்டாலும் அவை அனைத்தும் மெகுல் சோக்சியின் அலுவலகத்தில் தான் செயல்பட்டு வந்தன.” என தெரிவித்துள்ளார்

திவ்யேஷ் காந்தியும் இயக்குனர்களில் ஒருவர் என்றாலும் இவர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவர் இல்லை,  சாட்சி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Nirav modi shifted all his dummy directors to Cairo
-=-