டில்லி

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடந்ததா என்பது குறித்து தேசிய விசாரணை ஆணையம் விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

கேரள மாநிலத்தை சேர்ந்த இந்துப் பெண் அகிலா ஒரு இஸ்லாமிய வாலிபர் ஜஹான் என்பவரைக் காதல் திருமணம் செய்துக் கொண்டார்.    அதன் பின் அவர் தன் பெயரை ஹதியா என மாற்றிக் கொண்டார்.   இந்த திருமணம் ஒரு லவ் ஜிகாத் திருமணம் எனக் கூறி அந்தப் பென்ணின் பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர்.   (ஒரு இந்துப் பெண்ணை இஸ்லாமியராக மாற்றுவதற்காக செய்யப்படும் திருமணத்தை லவ் ஜிகாத் என அழைக்கின்றனர்)   கேரள நீதிமன்றம் பெற்றோருக்கு ஆதரவாக தீர்ப்பளித்த்தது.

அதை எதிர்த்து ஜஹன் தனது மனைவியை அவர் பெற்றோர் கடத்தி வைத்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.   அப்போது ஹதியாவின் கணவர் ஜஹன் அளித்த ஆட்கொணர்வு மனுவின் பேரில் விசாரணை நடத்திய உச்சநீதிமன்றத்திடம் ஹதியா தான் விரும்பி மணம் புரிந்துக் கொண்டதாக தெரிவித்தார்,  அதன் பிறகு ஹதியாவுக்கு பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து சென்று  தனது கல்வியைத் தொடர நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இன்று இந்த வழக்கு நீதிபதிகல் கான்வில்கர் மற்றும் சந்திரசூட் அடங்கிய அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது.   அப்போது அந்த அமர்வு, தேசிய புலனாய்வுத் துறையிடம் “நீங்கள் இந்த வழக்கு குறித்து விசாரணை மேற்கொள்வதில் நீதிமன்றத்துக்கு எந்த ஒரு ஆட்சேபமும் இல்லை.    ஆனால் ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் திருமண பந்தம் உள்ளதா என்பதை ஆராய உங்களுக்கு உரிமை இல்லை.    ஒரு வயது வந்த பெண்ணுக்கும் வயது வந்த ஆணுக்கும் அவரவர் விருப்பப் படி திருமணம் செய்துக் கொள்ள முழு உரிமை உண்டு”  என தெரிவித்துள்ளது.