முத்தலாக் மசோதாவுக்கு எதிர்த்து வாக்களிப்போம்: திமுக எம்.பி. கனிமொழி

டில்லி:

முத்தலாக் மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படஉள்ளது. இந்த நிலையில், மசோதாவுக்கு எதிர்த்து வாக்களிப்போம் என்று திமுக மாநிலங்களவை எம்.பி.யான கனிமொழி கூறி உள்ளார்.

திருத்தப்பட்ட புதிய முத்தலாக் மசோதா மக்களவையில்  கடும் அமளிகளுக்கு இடையே 27ந்தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி,  திமுக. முத்தலாக் சட்டத்தை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இந்த சட்டப்படி 3 ஆண்டுகள் சிறை விதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. சிவில் சட்டத்தை கிரிமினலாக கொண்டு வருவதை திமுக நிச்சயம் ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்த மசோதாவை  எதிர்த்து மாநிலங்களவையில் நாங்கள் வாக்களிப்போம். இதை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு

பெண்கள் மீது இவ்வளவு அக்கறை கொண்ட பா.ஜனதா 33 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான பெண்கள் மசோதாவை ஏன் கொண்டு வரவில்லை. அது அவர்களின் தேர்தல் அறிக்கையிலேயே இருக்கிறது. பாராளுமன்றத்தில் பெண்கள் அதிக அளவில் இல்லை. அதில் முனைப்பு காட்டாமல் இஸ்லாமிய பெண்கள் மீது மட்டும் அக்கறை காட்ட துடிப்பது ஏன்? நிச்சயமாக இது மக்களை பிரித்தாளக் கூடிய ஒரு எண்ணம்.

இதுவரைக்கும் இருந்த பிரதமர்கள் பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது அவர்கள் பதில் அளிக்கும் நேரத்தில் அவைக்கு வந்து பதில் அளித்துள்ளார்கள். ஆனால் பாராளுமன்ற கூட்டம் தொடர் நடக்கும்போதே வெளிநாட்டுக்கு பயணம் செய்த பிரதமர் மோடிதான்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: kanimozhi, Lok Sabha, New Muthalaq Bill, Triple Talaq, Union Minister Ravi Shankar, கனிமொழி, நாளை மாநிலங்களவையில் தாக்கல், மாநிலங்களவையில் தாக்கல், முத்தலாக் மசோதா
-=-