சென்னை: மக்கள் அதிகம் உபயோகப்படுத்தும், ’கூகிள் பே’ மூலம் புதிய மோசடி நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி தமிழ்நாடு காவல்துறை அறிவித்துள்ளது.

நவின டிஜிட்டல் உலகம் எவ்வளவுக்கு எவ்வளவு வேகமாக வளர்ந்து வருகிறதோ, அந்த அளவுக்கு டிஜிட்டல் மோசடிகளும் அரங்கேறி வருகின்றன.  அதுபோல டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளிலும் பல்வேறு மோசடிகள் அரங்கேறி வருகின்றன. இது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீப காலமாக, பூக்கும் வியாபாரி உள்பட அனைத்து தரப்பினரும் இணையதள பண பரிவர்த்தனையேயே விரும்புகின்றனர். இதனால் மோசடிகளும் எளிதாக அரங்கேறி வருகிறது.

கூகுள் பே இல்லாத கடைகளே இல்லை எனும் அளவிற்கு அனைத்து இடங்களிலும் கூகுள் பே ஆக்கிரமித்துள்ளது. 10 ரூபாய் டீயாக இருந்தலும் 10ஆயிரம் ரூபாய் பொருளாக இருந்தாலும் அதனை கூகுள் பே வழியாக பணம் செலுத்தி வாங்குவதையே இன்றைய இளம் தலைமுறையினர் விரும்புகின்றனர். அப்படிப்பட்ட கூகுள் பே மூலம் புதிய மோசடி ஒன்றை ஒரு கும்பல் அரங்கேற்றத் தொடங்கி உள்ளது.

யாரோ ஒருவர் தெரிந்தே உங்கள் வங்கிக் கணக்கு அல்லது கூகிள் பே கணக்கிற்கு பணத்தை அனுப்புவார். மேலும் உம்க்கள் கணக்கில் தவறுதலாக பணம் இருந்ததாக் ஔங்களுக்கு தெரிவிக்க உங்களை அழைக்கிறார், மேலும் பணத்தை அவர்களின் எண்ணுக்கு திருப்பி அனுப்புமாறு கோருகிறார்.

அப்படிப்பட்ட கூகுள் பே மூலம் புதிய மோசடி ஒன்றை ஒரு கும்பல் அரங்கேற்றத் தொடங்கி உள்ளது. யாரோ ஒருவர் தெரிந்தே உங்கள் வங்கிக் கணக்கு அல்லது கூகிள் பே கணக்கிற்கு பணத்தை அனுப்புவார். மேலும் உம்க்கள் கணக்கில் தவறுதலாக பணம் இருந்ததாக் ஔங்களுக்கு தெரிவிக்க உங்களை அழைக்கிறார்,

நீங்கள் பணத்தை திருப்பி அனுப்பினால், உங்கள் கணக்கு ஹேக் செய்யப்படும் எனவே, யாராவது உங்கள் கணக்கில் தவறாக பணம் பெற்றிருந்தல் அழைப்பாளரிடம் அடையாள சான்றுடன் அருகே உள்ள காவல் நிலையத்திற்கு வந்து பணமாக எடுத்துக் கொள்ள சொல்லுங்கள் என காவல்துறை தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கை பதிவில்,  நீங்கள் பணத்தை திருப்பி அனுப்பினால், உங்கள் கணக்கு ஹேக் செய்யப்படும் எனவே, யாராவது உங்கள் கணக்கில் தவறாக பணம் பெற்றிருந்தல் அழைப்பாளரிடம் அடையாள சான்றுடன் அருகே உள்ள காவல் நிலையத்திற்கு வந்து பணமாக எடுத்துக் கொள்ள சொல்லுங்கள்.

இந்த மோசடி இப்போதுதான் தொடங்கி உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும் என தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. எனவே யாராவது உங்கள் கணக்கில் தவறாக பணம் அனுப்பினால் கூகுள் பே மூலம் அனுப்பாமல் எச்சரிக்கையாக இருந்து அருகே உள்ள காவல் நிலையத்தில் வந்து வாங்கி கொள்ளும்படி கூறுங்கள்.