ஊரும் சமையலும்: நெல்லை தாளித்த கொழுக்கட்டை…

 

தேவையானவை;

இட்லி அரிசி – 2 டம்ளர்

தேங்காய் – அரை மூடி (துருவியது)

காய்ந்த மிளகாய் – 5

கடுகு, உளுந்து – தலா அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை;

இரண்டு டம்ளர் இட்லி அரிசியை நான்கு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து, நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் மூன்று டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, மாவை அதில்  சேர்த்து கொழுக்கட்டை பதத்துக்கு வதக்கவும். பிறகு வேறொரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, மிளகாய் வற்றல் சேர்த்துத் தாளித்து, மாவில் கலக்கவும்.

 

அதனுடன் உப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்துப் பிசையுங்கள். மாவை விரும்பிய வடிவில் கொழுக்கட்டைகளாகப் பிடித்து, இட்லி தட்டில் வேகவைத்து எடுத்தால் சுவையான தாளித்த கொழுக்கட்டை ரெடி.!

 

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: ஊரும் சமையலும்: நெல்லை தாளித்த கொழுக்கட்டை...
-=-