டில்லி

ந்த ஆண்டும் சி பி எஸ் ஈ பாடத்திட்டத்தின் படிதான் நீட் தேர்வு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு மருத்துவ பொது நுழைவுத் தேர்வான நீட் தேர்வை அனைத்து மாநிலங்களுக்கும் கட்டாயமாக்கி இருந்தது.    அந்த தேர்வு சி பி எஸ் ஈ பாடத் திட்டத்தின் படி நடைபெற்றதால் மாநில கல்வி முறைப்படி பயின்ற மாணவ மாணவிகள் பலரும் மருத்துவக் கல்வி பெறும் வாய்ப்பை இழந்தனர்.

சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு நீட் நுழைவுத் தேர்வில் மாநில கல்வி பாடத்திட்டப்படியும் கேள்விகள் கேட்கப்படும் என அறிவித்தது.   மாநில கல்வி முறைப்படி பயின்ற மாணவர்களின் நலன் கருதி இதை செய்துள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருந்தார்.   இது மாணவர்களிடயே சற்றே நிம்மதியைக் கொடுத்தது.

தற்போது மத்திய இடை நிலை கல்வி வாரியம், “நீட் தேர்வில் எந்த வித மாறுதலும் செய்யப்படமாட்டாது  கடந்த ஆண்டு போலவே இண்ட ஆண்டும் சி பி எஸ் ஈ பாட திட்டத்தின் படியே கேள்விகள் கேட்கப்படும் .   இதுவே இந்தத் தேர்வை நடத்தும் சி பி எஸ் ஈ யின் நிலைப்பாடு ஆகும்”  என அறிவித்துள்ளது.

இந்த திடீர் அறிவிப்பு மாநில வழிக் கல்வி பணியும் மாணவர்களிடையே கடும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.