டில்லி,

ருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் அகில இந்திய அளவிலான நீட் மருத்துவ நுழைவு தேர்வு எழுத வேண்டியது கட்டாயம் என்ற சூழலில் தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெற உள்ள தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

மே 6ந்தேதி நீட் நுழைவுதேர்வு நடைபெறும் என்று சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக்ததிற்கு விலக்கு அளிக்கப்படும் என்று கடைசிவரை கூறிவந்த மத்திய அரசு, இறுதியில் கையை விரித்துவிட்டது. இதன் காரணமாக  கடந்த ஆண்டு நீட் தேர்வு வாயிலாகவே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றது.  இதன் காரணமாக 1155 மதிப்பெண் பெற்ற மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார்.

அதைத்தொடர்ந்து, நீட் தேர்வு குறித்து பல்வேறு சர்ச்சைகள், குளறுபடிகள் எழும்பின.  பிற மாநிலத்தில் வழங்கப்பட்ட வினா த்தாள்கள் எளிமையாக இருந்தது என்றும், தமிழகத்தில் கடினமாக இருந்தது என்றும் கூறப்பட்டன.

அதைத்தொடர்ந்து, நீட் தேர்வில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் மற்றும் அனைத்து மாநிலங்களின் பாடத்திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, அதிலிருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும் என பிரகாஷ் ஜவடேகர் உறுதி அளித்திருந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் நீட் தேர்வு குறித்து கருத்து தெரிவித்த சிபிஎஸ்இ கல்வி வாரியம், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து மட்டுமே கேள்விகள் தயார் செய்யப்படும் என்று அடாவடியாக அறிவித்து உள்ளது.

அதைத்தொடர்ந்து,  எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர்வதற்காக மே 6ம் தேதி நீட் தேர்வு நடைபெறும்  என்றும்  சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

மேலும், டில்லியில் உள்ள எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளதாகவும்  சிபிஎஸ்இ. தெரிவித்து உள்ளது.