பஞ்சாபில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்துவுக்கு துணை முதல்வர் பதவி தந்து அவரை காங்கிரஸ் கட்சிக்குள் இழுக்க முயற்சிகள் நடந்து வருவதாக தெரிகிறது.

sidhu

பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனது பலத்தை அதிகரித்து எப்படியேனும் வென்றுவிட வேண்டும் என்று முயற்சித்து வருகிறது. முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து ஏற்கனவே பாஜகவில் இருந்து வெளியேறி ஆவாஸ்-இ-பஞ்சாப் என்ற மாநில கட்சியை நடத்தி வருகிறார். அவருக்கு துணை முதல்வர் பதவி கொடுத்து கட்சிக்குள் இழுக்க காங்கிரஸ் கட்சி முயன்றுவருகிறது.
மேலும் சித்துவின் ஆதரவாளர்கள் 13 பேருக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்கவும் காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துவருவதாகவும் தெரிகிறது.
பஞ்சாபில் தற்போது அகாலிதளம்-பாஜக கூட்டணி ஆட்சி நடந்துவருகிறது. இந்த பலம் வாய்ந்த கூட்டணி ஒருபக்கம் இருக்க, ஆம் ஆத்மி கட்சி இன்னொரு பக்கம் மிகப்பெரிய சக்தியாக வளர்ந்து வருகிறது எனவே இந்த இருமுனை தாக்குதலை சமாளிக்கவே காங்கிரஸ் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட்டுவருவதாக கூறப்படுகிறது.