டெல்லி:
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பான ஆவணங்கள் கேட் சுப்ரமணியன் சுவாமியின் கோரிக்கையை டெல்லி மெட்ரோபாலிடன் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
நேரு பிரதமராக இருந்த போது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பின்னர் நஷ்டத்தில் இயங்கியது. இதற்காக அந்த பத்திரிகை நிர்வாகம் கடன் வாங்கியது. இந்த கடனை அடைக்க முடியாமல் அந்த பத்திரிகை தவித்த போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், துணைத்தலைவர் ராகுல் காந்தியும் கட்சி பணத்தில் இருந்து அந்த பணத்தை கொடுத்து கடனை அடைத்தனர்.

இதனிடையே நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு சொந்தமான ‘அசோசியேட் ஜர்னல்ஸ்’ நிறுவனத்தின் சொத்துகளை ‘யங் இந்தியன்’ என்ற நிறுவனத்தின் மூலம் முறைகேடாக கையகப்படுத்தியதாக சோனியா காந்தி, ராகுல் காந்தி, கட்சியின் பொருளாளர் மோதிலால் வோரா, பொதுச்செயலாளர் ஆஸ்கர் பெர்னாண்டஸ், சுமன் துபே, சாம் பிட்ரோடா ஆகியோருக்கு எதிராக பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி வழக்கு தொடர்ந்தார்.இவ்வழக்கு பாட்டியாலா கோர்ட்டில் நடந்து வருகிறது.
டெல்லி மெட்ரோபாலிடன் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கு தொடர்பாக காங்கிரஸ் கட்சியிடம் இருந்தும், அசோசியேடட் ஜர்னல்ஸஸ் நிறுவனத்திடம் இருந்தும் சில ஆவணங்களை சுப்பிரமணியன் சுவாமி கோரியிருந்தார். அந்த ஆவணங்களை தமக்கு வழங்க உத்தரவிடுமாறு நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சுப்ரமணியன் சுவாமியின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.