” விண்வெளியில் புற்றுநோய்க்கு சிகிச்சை ” – நாசாவின் முயற்சியில் வெற்றி

விண்வெளியில் இருந்தபடி புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதில் நாசா ஆராய்ச்சி மையம் முன்னேற்றம் அடைந்துள்ளது. புற்றுநோய் செல்களை துல்லியமாக பரிசோதிக்க முடியும் என நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

nasa

புற்றுநோய்க்கான நிரந்தர சிகிச்சை மற்றும் மருந்துக்களை கண்டுப்பிடிப்பதில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். புற்றுநோய் சிகிச்சைக்கான ஒரு தேடலில் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் ஈடுபட்டுள்ளது. விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ரத்த செல்களின் பரிசோதனைகளை நாசா நடத்தி வருகிறது. இதில் நாசா வெற்றியும் அடைந்துள்ளது.

இது தொடர்பாக நாசா ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளது. அதில் மைக்ரோ ஆக்டிவிடி சயின்ஸ் குளோவ்பாக்ஸ் விண்வெளி நிலையத்தில் இருந்தபடி, விண்வெளி வீரரான செரீனா அவுன் – சான்ஸலர் புற்றுநோய் சிகிச்சை ஆய்வுக்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இதற்காக இந்த ஆண்டில் தொடக்கத்திலேயே செரீனா அவுன் விண்வெளிக்கு சென்றடைந்தார். ரத்த நாளங்களின் மேற்பரப்புக்கு இட்டுசெல்லும் உயிரணுக்கள் மீதான சோதனைகளை செரீனா அவுன் மேற்கொண்டு வருகிறார். இதற்காக அவர் சில மாதங்கள் அங்கேயே தங்க உள்ளார்.

நாசாவின் கூற்றுப்படி ” பூமியில் உள்ள ஒரு உயிரினத்தின் இரத்தத் திசுக்கள் எப்படி செயல்படுமோ அதைப்போலவே கலாச்சார உணவுகளில் உட்செலுத்தப்படும் நுண்ணுயிரிகள் செயல்படுகின்றன “ என்பது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இதனால், சுழலும் செல்கள் பொதுவாக உடலில் இருந்துகொண்டு செயல்படுவது போலவே நடந்து கொள்கின்றன.

புற்றுநோய் ஆராய்ச்சியில், கீமோதெரபி சிகிச்சைக்கான செல்களை துல்லியமாக பரிசோதிக்க முடியும் என நாசா நம்புகிறது. இந்த சோதனையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-