சென்னை: தமிழகஅரசின் அண்ணாவிருது பெறும் நாஞ்சில் சம்பத் முதல்வருக்கு நன்றி தெரிவித்து டிவிட் பதிவிட்டு உள்ளார்.

பேச்சாற்றல் மிக்க இலக்கியவாதியான நாஞ்சில் சம்பத்துக்கு   தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை  சார்பில் 2022ம் ஆண்டு பரிசு பெறுபவர்கள் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் பேரறிஞர் அண்ணா விருதுக்கு நாஞ்சில் சம்பத் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

நாஞ்சில் சம்பத் ஆரம்ப காலத்தில், திமுகவில் தலைமைக் கழகப் பேச்சாளராக இருந்தார். பின்னர் அங்கிருந்து விலகி, வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தில் இருந்து, பின்னர், அதிமுகவுக்கு மாறி, ஜெயலலிதாவிடம் இன்னோவா கார் பரிசு பெற்று, இன்னோவா சம்பத்மாக உலாக வந்தவர், அவரது மறைவுக்கு பிறகு டிடிவி ஆதரவாளராக மாறினார். ஆனால், சசிகலா குரூப் கொடுத்த அடாவடியால் வெறுத்துபோய், அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்துவிட்டு சென்றவர், பின்னர் சட்டமன்ற தேர்தலின்போது திமுக ஆதரவாளராக மாறினார். தற்போது இலக்கிய பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை  சார்பில் 2022ம் ஆண்டு பரிசு பெறுபவர்கள் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் பேரறிஞர் அண்ணா விருதுக்கு நாஞ்சில் சம்பத் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

இதையடுத்து, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து நாஞ்சில் சம்பத் டிவிட் பதிவிட்டுள்ளார். அதில்,  நான் அண்ணாந்து பார்த்த அண்ணா, அவரது பெயரில் விருது வழங்கி என்னை கெளரவப்படுத்தியிருக்கும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு   கோடி நன்றிகள் என்று கூறியுள்ளார்.

இந்தியாவின் பிரதமர் பெயரை அறிவிக்கிற துணிச்சல் ஸ்டாலின் ஒருவருக்குத்தான் இருக்கிறது: நாஞ்சில் சம்பத் புகழாரம்