தமிழகத்தில் மாயமான நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு

சென்னை:

தமிழகத்தில் இருந்து மாயமான நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு.

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் குலசேகரமுடையார் அறம் வளர்த்த நாயகி கோவில் உள்ளது. இந்த கோவிலில் 1982ம் ஆண்டில் நடராஜர், சிவகாமி உள்ளிட்ட 4 சிலைகள் மாயமாகின.

இதில் நடராஜர் சிலை தற்போது ஆஸ்திரேலியாவில் இருப்பதை சிலை தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அந்த சிலையை, தமிழகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: mystical Natarajar statue in Tamilnadu was found in Australia, தமிழகத்தில் மாயமான நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு
-=-