சென்னை,

மிழகத்தில் தொடரும் மர்ம மரணங்கள் குறித்து ஐகோர்ட்டு நீதிபதி மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், ரெய்டு  அமைச்சர் விஜயபாஸ்கர் நண்பர்  சுப்பிரமணியம் போன்றோரின் தொடரும் மர்ம மரணங்கள் குறித்து ஐகோர்ட்டு நீதிபதி மேற்பார்வையில் விசாரணை தேவை என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,

ஜெயலலிதாவின்  கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 24-ஆம் தேதி அத்துமீறி நுழைய முயன்ற 11 பேரை அதன் காவலாளிகள் தடுத்தனர். அப்போது மர்ம கும்பல் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் ஓம்பகதூர் என்ற காவலாளி கொல்லப்பட்டார். மற்றொரு காவலாளி கிஷன் பகதூர் படுகாயமடைந்து கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

 

இதனிடையே சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் வருமானவரித்துறை நடத்தப்பட்ட போது சோதனைக்குள்பட்ட நாமக்கல்லைச் சேர்ந்த சுப்பிரமணியம் நேற்று மர்மமான முறையில் அவரது தோட்டத்தில் இறந்து கிடந்தார்.

சுப்பிரமணியன், விஜயபாஸ்கரின் நண்பர் என்றும் அரசு ஒப்பந்தங்களை செய்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொடநாடு எஸ்டேட் கொலை- கொள்ளை வழக்கு, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு ஆகியவை விசாரணை யில் உள்ள நிலையில் கனகராஜும், சுப்பிரமணியனும் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளனர்.

ஆகையால் இந்த மர்ம மரணங்கள் குறித்த வழக்குகளை உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் நடத்த வேண்டும் .என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.