சென்னை: எனது ஜென்மம் சாபல்யம் அடைந்தது என சென்னை திநகரில் கட்டப்பட்டு விமரிசையாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட  பத்மாவதி தாயார் கோவிலுக்கு சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கி சிறப்பித்த, நடிகை காஞ்சனா உருக்கமாக கூறினார்.

ஜென்மம்,  சாபல்யம் என்பது, ஒருவரின் செயலால் விளையும் நன்மை, தீமையை குறிக்கும். இதிலிருந்து உருவான சொல்லே ‘சாபல்யம்’ என்பது. ‘எண்ணியது பலித்தது’ என்பது இதன் பொருள். ஜென்ம என்பது பிறவியைக் குறிக்கும். ஜென்ப சாபல்யம் என்பது பிறந்ததன் பலனை ஒருவர் அடைந்தததைக் குறிக்கும்.

விமானப் பணிப்பெண்ணாக வாழ்க்கையைத் துவங்கிய வசுந்தரா தேவியை தனது ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் மூலம் 1964 ம் ஆண்டு காஞ்சனா என்று பெயர்சூட்டி அவரது வாழ்க்கையில் ஒளியேற்றினார் இயக்குனர் ஸ்ரீதர். அதன்பின்னர் ஏராளமான படங்களில் நடித்து சம்பாதித்தவர் ஒரு கட்டத்திற்கு மேல் ஆன்மிக வாழ்க்கைக்கு திரும்பினார். திருப்பதி ஏழுமலையான், பத்மாவதி தாயார் மீது கொண்டுள்ள அளவுக்கடந்த அன்பினால், தனக்கு சொந்தமாக தி.நகர். ஜிஎன்செட்டி சாலையில் உள்ள நிலத்தை மொத்தமாக திருப்பதி தேவஸ்தானத்துக்கு தானமாக வழங்கினார். அதன் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இந்த இடத்தில்தான் திருப்பதி தேவஸ்தானம், அண்டை மாநிலங்களில் முதன்முதலாக பத்மாவதி தாயார் கோவிலை சுமார் 10 கோடி மதிப்பில் கட்டி முடித்து விமரிசயைக கும்பாபிசேகத்தை நடத்தி முடித்துள்ளது.

இந்த கோவில்  கட்டுவதற்கான பணிகள் கடந்த  2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அந்த ஆண்டு பிப்ரவரி மாதம் காஞ்சி சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சுவாமிகள் பத்மாவதி தாயாருக்கு கோயில் கட்டுவதற்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

தற்போது பத்மாவதி தாயாருக்கு கோயில் கட்டும் பணிகள் முடிக்கப்பட்டு மார்ச் மாதம் 17 ஆம் தேதி (நேற்று) மகாகும்பாபிஷேகம் விமரிசையாக நடத்தப்பட்டது.  இதன் காரணமாக துவஜஸ்தம்பம் எனும் கோயில் கொடிமரம் இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தான (டிடிடி) தமிழக ஆலோசனைக்குழு தலைவர் சேகர் ரெட்டி, டிடிடி இணை செயலாளர் வீரபிரம்மம் ஆகியோர் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந்­தி­யா­வி­லேயே முதன்­மு­த­லாக சென்­னை­யில்­தான் பத்­மா­வதி தாயா­ருக்கு தனிக் கோவில் கட்­டப்­பட்­டுள்­ளது. வடக்கு திசையை நோக்கி அமைந்­துள்ள இந்தக் கோவி­லில் மண்­ட­பம், மடப்­பள்ளி, வாகன நிறுத்­து­மி­டம் ஆகி­ய­வை­யும் உள்­ளன. கோவி­லின் ராஜ­கோ­பு­ரம் மூன்று நிலை­க­ளைக் கொண்­டது என்­றும் கலை­ந­யம் மிக்க சிற்­பங்­கள் அதில் இடம்­பெற்­றுள்­ள­தா­க­வும் கோவில் நிர்­வா­கம் தெரி­வித்­துள்­ளது.

இந்த கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 12ம் தேதியில் இருந்து சிறப்பு பூஜைகளும், ஹோமங்களும் நடந்து வந்தன. இதை தொடர்ந்து, பத்மாவதி தாயார் சிலை கர்ப்பகிரகத்தில் பிரதிஷ்டை செய்யும் விழா நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு நடந்தது. கோயிலுக்கு தேவையான சிலைகள், திருப்பதியில் வடிக்கப்பட்ட பத்மாவதி தாயார், துவாரபாலகர்களான வனமாலி, பலாஹினி சிலைகள், மூல விக்ரஹங்கள், கலசங்கள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டன. மூலவர் பத்மாவதி தாயார் சிலை 3 நாட்கள் நெல் தானியத்திலும், தண்ணீரிலும், 2 ஆயிரம் லிட்டர் பாலிலும் அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து, நேற்று முன்தினம் காலையில் 4½ அடி உயரம், 3½ அடி அகலத்திலான பத்மாவதி தாயார் சிலை பிரதிஷ்டை செய்வதற்கான சதுஸ்தனா அர்ச்சனா பூஜை, மூர்த்தி ஹோமம், காலை 7 மணியில் இருந்து 9 மணி வரை நடந்தது. 9 மணியில் இருந்து 9.30 மணிக்குள் தாயார் சிலை கருவறைக்கு கொண்டு சென்று அங்கு அஷ்டபந்தன பூஜைகள் செய்யப்பட்டு பத்மாவதி தாயார் பிரதிஷ்டை நடந்தது. பத்மாவதி தாயார் கருவறையில் நிறுவப்பட்டதை தொடர்ந்து திருப்பதி கோயிலில் உள்ள ஆகம விதிப்படி அனைத்து சம்பிரதாயங்களும் பின்பற்றப்பட்டன.

இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை சதுசதனா அர்ச்சனை தாயாருக்கு செய்யப்பட்டது. 5 மணி முதல் 6 மணி வரை மகா சாந்தி ஹோமம் பூர்ணாஹூதி, 6 மணி முதல் 6.30 மணி வரை கும்ப உத்தப்பன, 7 மணி முதல் 7.15 மணிவரை ஆலய பிரதக்க்ஷனா, 7.15 முதல் 7.30 மணி வரை சம்பாத்ஜய சபர்ஷனம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான மகா கும்பாபிஷேகம் காலை 7.30 மணி முதல் 7.44 மணிக்குள் நடந்தது. அப்போது கோயில் விமான கோபுரத்திலும், ராஜகோபுரத்திலும் ஒரே நேரத்தில் புனிதநீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

இந்த கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்ட நடிகை காஞ்சனா கூறும்போது,  உலகிலுள்ள பலகோடி அகல் விளக்குகளாக ஜொலிக்கும் பகவானின் ஆத்மாக்களை வரவேற்கிறேன். என் தங்கை கிரிஜா பான்டே, ஸ்ரீநிவாசனின் பக்ததை. அவர் அடிக்கடி திருமலைக்குச் செல்வார். பலமுறை கீழ் திருப்பதியில் இருந்து நடந்தே செல்வார்.

அந்த காலத்தில் நான் பிரபல நடிகையாக இருந்தாலும் அவருடன் நானும் திருப்பதி செல்வதை வழக்கமாக கொண்டிருந்தேன். என் தங்கை கடவுளுக்காக தன்னையே அர்ப்பணித்தவர். சில காரணங்களால் பெற்றோர், எனக்கு எதுவும் செய்யவில்லை. அவர்களின் சொத்துக்கள் எல்லாம் கைவிட்டு போகும் நிலை ஏற்பட்டது. நான் சம்பாதித்த சொத்துக்கள் கூட பறிபோகும் நிலை வந்தது. இந்த சூழலில்தான் தி.நகர் சொத்துக்களை கோவிலுக்கு எழுதி வைக்க நான், என் தங்கை, மைத்துனர் மூவரும் ஒருமனதாக தீர்மானித்து கோவிலுக்கு தானமாக வழங்கினோம்.

தற்போது அந்த இடத்தில்  பத்மாவதி தாயார் கோவில் எழுப்பப்பட்டுள்ளது. இதன்மூலம் எங்களின் ஜென்மம் சாபல்யம் அடைந்து விட்டது.

என்னை ஒவ்வொரு நொடியும் பெருமாள்தான காப்பாற்றி வருகிறார். வாழ்நாள் முழுவதும் அவர் நினைவு ஒன்றே போதும்…

இவ்வாறு கூறினார்.