ஃப்ளிப்கார்ட் விவகாரத்தில் ஆர் எஸ் எஸ் ஐ பாஜக கண்டு கொள்ளவில்லை : முரளி மனோகர் ஜோஷி

டில்லி

மெரிக்க ஃப்ளிப்கார்ட் நிறுவனம் வால்மார்ட்டை வாங்கிய விவகாரத்தில் ஆர் எஸ் எஸ் ஐ பாஜக கண்டு கொள்ளவில்லை என மூத்த பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி வருத்தம் தெரிவித்துள்ளர்.

அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக நிறுவனமான வால்மார்ட் இந்திய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஃப்ளிப்கார்ட்டின் 76% பங்குகளை விலைக்கு வாங்கியது.   இதற்கு ஆர் எஸ் எஸ் இயக்கம் தனது எதிர்ப்பை தெரிவித்தது.   ஆனாலும் பாஜக அரசு இந்த விவகாரத்தில் தலையிடவில்லை.

இது குறித்து பாஜகவின் மூத்த தலைவரும் ஆர் எஸ் எஸ் உறுப்பினருமான முரளி மனோகர் ஜோஷி, “மத்திய வர்த்தகத் துறை அமைச்சகத்துக்கு இது குறித்து பல முறை கடிதம் எழுதியும் அரசு அதை கவனிக்கவில்லை.   இந்த நிர்வாக மாற்றத்தை அரசு தடுத்திருக்க வேண்டும்.   இதனால் உள்நாட்டு வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படும்.   இது மிகவும் வருந்தத் தக்கது.

வால்மார்ட் ஏற்கனவே பல நாடுகளில் நுழைந்து அந்த நாடுகளின் உள்நாட்டு வர்த்தகத்தை அழித்துள்ளது தெரிந்ததே.   அதனால் தான் ஆர் எஸ் எஸ் இந்த விவகாரத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.   நமது நாட்டின் வர்த்தகத்தை அழிக்க பின்புற வழியாக வால்மார்ட் நிறுவனம் நுழைந்துள்ளதாக ஆர் எஸ் எஸ் குறிப்பிட்டது சரியே.” எனக் கூறி உள்ளார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Murali Manohar Joshi said BJP is ignoring RSS in flipkart issue
-=-