ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரு ஒருநாள் போட்டிகளில் இருந்து மகேந்திர சிங் தோனி நீக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்( பிசிசிஐ) அறிவித்துள்ளது.

msdhoni

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றிப்பெற்றது. இதனை தொடர்ந்து இரு அணிகளும் மோதும் 3வது ஒருநாள் போட்டி இன்று ராஞ்சியில் நடைபெற்றது. தோனியின் சொந்த ஊரில் நடக்கும் இந்த போட்டியை காண அவரது ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். ஆனால் தோனி சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்து அனைவருக்கும் ஏமாற்றம் அளித்தார்.

இதில் ரோஹித் சர்மா, ஷிகர் தவாம், ராயுடு, தோனி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் சொதப்ப ஆஸ்திரேலிய அனி 32 ரன்கள் வித்யாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிப்பெற்றது. இதனை தொடர்ந்து 3 போட்டிகள் முடிவில் 2-1 என இந்தியா முன்னிலை வகிக்கிறது.

doni

இதற்கிடையே உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மே மாதம் தொடங்கி ஜூலை வரை நடைபெற உள்ளது. இதற்காக ஒவ்வொரு அணி தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்திய அணியும் அதற்கான வேலைகளில் ஈடுபட உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி இரு ஒரு நாள் போட்டிகளில் தோனி பங்கேற்கமாட்டார் எனவும், அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனை இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் உறுதிப்படுத்தி உள்ளார்.

உலகக் கோப்பைக்கு முன்னதாக ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பு அளிப்பதற்காக பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் 4 மற்றும் 5வது ஒருநாள் போட்டி இம்மாதம் 10 மற்றும் 13ம் தேதிகளில் நடைபெற உள்ளது.