பிரிவினை வாதத்தை தூண்டுகிறது பாஜக: உ.பி. மாநில பா.ஜ. எம்.பி. சாவிரித்திரி பாய் புலே கட்சியில் இருந்து திடீர் விலகல்!

பஹ்ரிச்:

த்தரபிரதேச மாநிலம் பஹ்ரிச் தொகுதி பாஜக எம்.பி.யான சாவித்திரி பாய் புலே, பாஜகவில் இருந்து விலகி உள்ளார். இது பாஜக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தலித் எம்.பி.யான இவர், மத்திய மாநில பாஜக அரசின் தலித் விரோத போக்கு, பிரிவினை வாதம் போன்ற நடவடிக்கைகளால் மனம் நொந்து போய் இருந்து வந்த நிலையில், தற்போது பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார்.

மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் பதவி ஏற்றது முதல், சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கை களும், தலித்களுக்கு எதிரான போக்கும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் அன்றாடம் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக பல இடங்களில் மோதல், கலவரங்கள் ஏற்பட்டு பலர் உயிரிழந்து வருகின்றனர்.

மேலும் சமீபத்தில் உ.பி. மாநிலம்  ஆல்வார் மாவட்டத்தில் உள்ள மல்காவில் நடந்த ஒரு தேர்தல் கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் கூறினார்: “பஜ்ரங் பாலி ஒரு வனவாசகர், தலித் மற்றும் வடக்கில் இருந்து தெற்கு மற்றும் கிழக்கில் மேற்கில் அனைத்து இந்திய சமூகங்களையும் இணைக்க பணிபுரிந்தார் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அதுபோல அனுமனின் ஜாதி குறித்தும் பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

மாநில முதல்வரின் இதுபோன்ற சர்ச்சை பேச்சு மற்றும் மத்திய பாஜக அரசின் பிரிவினை வாதம் போன்ற காரணங்களால்,  உ.பி. மாநிலம் பஹ்ரிச் தொகுதி பாஜக எம்.பி.யான சாவித்திரி பாய் புலே, பாரதியஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார்.

பாரதியஜனதா ஆட்சியில் நாடு முழுவதும் மத வாதம் மற்றும் பிரிவினை வாதம், சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்து உள்ளதாக குற்றம் சாட்டி  பாஜக தலைமைக்கு அவர் கடிதம் எழுதி உள்ளார்.

சாவித்திரி பாய் புலே விலகியிருப்பது பாஜக தலைமையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இவர் விரைவில் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைவார் என கூறப்படுகிறது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: MP from Bahraich, Uttar Pradesh Savitribai Phule resigns from the party., பிரிவினை வாதத்தை தூண்டுகிறது பாஜக: உ.பி. மாநில பா.ஜ. எம்.பி. சாவிரித்திரி பாய் புலே கட்சியில் இருந்து திடீர் விலகல்!
-=-