ஆந்திராவில் 5 முக்கிய நதிகளை இணைக்க நடவடிக்கை….சந்திரபாபு நாயுடு உறுதி

ஐதராபாத்:

ஆந்திராவில் ஓடும் 5 முக்கிய நதிகளையும் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா எல்லையில் பாப்ளி நீர்ப்பாசன திட்ட அணை கட்டப்பட்டது. சட்டவிரோதமாக இந்த அணை கட்டியதாக கூறி கடந்த 2010ம் ஆண்டு எதிர்கட்சி தலைவராக இருந்த சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள் மகாராஷ்டிரா எல்லைக்குள் போராட்டம் நடத்த முயன்றனர்.

நந்தெட் மாவட்டத்திற்குள் நுழைய முயன்ற சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரை மகாராஷ்டிரா போலீசார் கைது செய்தனர். சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் புனே சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 15 பேருக்கு ஜாமீனில் வெளியே வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து மகாராஷ்டிரா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் 21ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த குறித்து சந்திரபாபு நாயுடுவின் மகனும் ஆந்திரா தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருமான லோகேஷ் கூறுகையில், எனது தந்தையும், மற்ற தெலுங்கு தேசம் கட்சி தலைவர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆவார்கள். தெலங்கானாவின் நலனுக்காக அவர் போராடினார். சிறையில் இருந்த போது வெளியே வர ஜாமீன் வேண்டுமென்று கூட அவர் கோரவில்லை’’ என்றார்.

இது குறித்து சந்திரபாபு நாயுடு கூறுகையில்,‘‘ ஆந்திராவில் உள்ள 5 முக்கிய நதிகள் இணைக்கப்படும். மகாராஷ்டிரா நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்டை கையாளுவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். அன்று நான் போராடாமல் இருந்திருந்தால் வட தெலங்கானா பாலைவனமாக மாறியிருக்கும்’’ என்றார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: move to connect the five major rivers in Andhra Pradesh says Chandrababu Naidu, ஆந்திராவில் 5 முக்கிய நதிகளை இணைக்க நடவடிக்கை....சந்திரபாபு நாயுடு உறுதி
-=-