மொரோக்கோ நாட்டில், பர்தாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மொரோக்கோ நாட்டை  மன்னர் ஆறாவது முகமது ஆட்சி செய்து வருகிறார். இந்த நிலையில், நாட்டில் உள்ள பெரும்பாலான துணிக்கடைகளுக்கு அந்தந்த பகுதி அரசு அதிகாரிகளிடமிருந்து ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், பர்தா துணிகளை விற்க வேண்டாம். புதிதாகவும் பர்தா துணிகளை வாங்க வேண்டாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் இது குறித்து அரசு, வெளிப்படையான அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. அதே நேரம் பர்தா தடை என்பதே தற்போது மெரோக்கோ நாடுமுழுதும் பேச்சாக இருக்கிறது.

பெரும்பாலோர் இந்த நடவடிக்கை சரியே என்று சொல்கிறார்கள். ஆனால் தீவிர மதவாதிகள், பர்தா அணிவது அவசியம் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.