சென்னை: மாண்டஸ் புயல், சென்னையில் இருந்து 180 கி.மீ. தொலைவில் புயல் நிலை கொண்டுள்ளது. இதனால் கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும்  என சென்னை வானிலை மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே இன்று இரவு 11.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கும். இரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை கரையை கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்க்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் இன்று இரவு  புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே மாமல்லபுரத்தில் மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை உள்பட பல பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த, வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன், மாண்டஸ் புயல், சென்னையில் இருந்து 180 கி.மீ. தொலைவில் புயல் நிலை கொண்டுள்ளது. இன்று நள்ளிரவு மாண்டஸ் புயல் கரையை கடக்கும்.  இன்று இரவு 11.30 மணிக்கு மாமல்லபுரம் அருகே கரையை கடக்க தொடங்கும். இரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை கரையை கடக்கும் எனவும் தெரிpவத்தவர்,  அதன் காரணமாக,  இன்று மதியம் முதல் காற்றின் வேகம் அதிகரிக்கும். காற்றானது, மணிக்கு 70 கி.மீ. வேகம் வரை காற்று வீசும் என கூறினார்.

மேலும், புயல் கரையை கடந்த 3 மணி நேரத்தில்  வலுவிழக்கும் என்றவர், காற்றின் வேகம் அதிகம் இருப்பதால் மீனவர்கள், இன்றும், நாளையும்  கடலுக்கு செல்ல வேண்டாம் என கூறினார்.  அதுபோல, புயல் காரணமாக,  வடதமிழ்நாட்டின் உள்பகுதிகளில் நாளை வரை கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்தார்.