டில்லி,
ரூபாய் நோட்டு பிரச்சினையில் மோடியின் நாடகம் இனி மக்களிடம் எடுபடாது, பாராளுமன்றம் வந்து பதில் சொல்ல வேண்டும் என்று ராகுல்காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

நேற்று குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றி கலந்துகொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, ரூபாய் நோட்டு விவகாரத்தில் மக்களின் ஆதரவு எனக்கு உள்ளது என்று பேசினார்.
அவரது பேச்சு குறித்து, அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டர் வலை பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
‘ரூபாய் நோட்டு விவகாரத்தில் பாராளுமன்றத்தில் நான் பேசுவதற்கு எதிர்க்கட்சிக்ள அனுமதிப்பதில்லை. எனவேதான் மக்கள் சபையில் பேச நான் முடிவு செய்து இருக்கிறேன் என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும்
ரூபாய் நோட்டு விவகாரத்தில் அரசுக்கு மக்கள் ஆதரவாக இருக்கிறார்கள் என்றும், பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தை நான் மேற்கொண்டிருக்கிறேன்” என்றும் பிரதமர் மோடி கூறி உள்ளார்.
ஆனால்,
மோடி அவர்களே, உங்களது நாடகத்தனமான வசனங்களை கேட்டு கேட்டு  நாட்டு மக்கள் களைப்படைந்து விட்டனர். உங்கள்  நாடக வசனங்கள் இனி மக்களிடம் எடுபடாது.
எனவே பாராளுமன்றத்துக்கு வந்து, அங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று உங்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.