தேர்தல் செலவுக்கு ரிசர்வ் வங்கியிடம் ரூ.ஒரு லட்சம் கோடி கேட்கிறது மோடி அரசு’: ப.சிதம்பரம்  குற்றச்சாட்டு

தேர்தல் செலவுக்கு ரிசர்வ் வங்கியிடம் ரூ.ஒரு லட்சம் கோடி கேட்கிறது மோடி அரசு என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான’: ப.சிதம்பரம்  அதிரடியாக குற்றச்சாட்டியிருக்கிறார்.
இது குறித்து கொல்கத்தாவில்  இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் தெரிவித்ததாவது:

“மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க.  அரசு மத்திய வங்கியான ரிசர்வ் வங்கியைக் கைப்பற்ற முயற்சிக்கிறது.

அடுத்த வருடம் நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு பாஜகவுக்குச் செலவு செய்ய பணம் தேவை. அதற்காக மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடம் இருந்து ரூ.ஒரு லட்சம் கோடியைக் கேட்டிருக்கிறது.  அரசுக்கு, வருமானம் வரும் அனைத்துக் கதவுகளும் அடைக்கப்பட்டுவிட்டது. அதனாலேயே இப்போது ரிசர்வ் வங்கிக்கு நெருக்கடி கொடுத்து ஒரு லட்சம் கோடி ரூபாயை பெற முயற்சிக்கிறது.

மத்திய அரசின் இந்த நெருக்கடிக்கு ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் படேல் அடிபணியமாட்டார் என்பது எங்களது நம்பிக்கை.

அப்படியான சூழலில் மத்திய அரசு ரிசர்வ் வங்கிச்சட்டம் பிரிவு7-ஐப் பயன்படுத்தி, ரூ. ஒரு லட்சம் கோடியை அரசின் கஜானாவுக்கு மாற்ற உத்தரவிடும்.

இந்தச் சூழல் ஏற்படும்போது, ரிசர்வ் வங்கி கவர்னருக்கு இரு வாய்ப்புகள் மட்டுமே இருக்கும். ஒன்று அவர் பணத்தை மத்திய அரசுக்கு மாற்ற வேண்டும், அல்லது தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இதில் எது நடக்கும் என்பது வரும் 19-ம் தேதி ரிசர்வ் வங்கியின் வாரியக் கூட்டத்தில் தெரிந்துவிடும்.

என்னைப் பொறுத்தவரை ரிசர்வ் வங்கி கவர்னர் எந்த முடிவு எடுத்தாலும், ரிசர்வ் வங்கியின் மதிப்பும், நம்பகத்தன்மையும் சீரமைக்க முடியாத அளவுக்குச் சீர்கெட்டுவிடும். ரிசர்வ் வங்கியைக் கைப்பற்றும் நோக்கில் மத்தியஅரசு முயற்சித்து வருகிறது. நாட்டின் மிக முக்கியமான அரசு நிறுவனம் ஒன்று புகழின் உச்சியில் இருந்து வீழப்போவது தெரிகிறது. .

ரிசர்வ் வங்கியின் வாரியக் குழுவில் மத்திய அரசு தனக்குச் சாதகமானவர்களைத் தேர்வு செய்து நியமித்திருக்கிறது. தனதுது ஒவ்வொரு விருப்பத்தையும் வாரியக்குழு மூலம் சாதிக்க நினைக்கிறது.

பணமதிப்பிழப்பின் விளைவுகள் பேரழிவை ஏற்படுத்திவிட்டது. ஆனாலும்  வேறு, ஏதேனும் பேரழிவு நடவடிக்கை ஏதும் இருக்கிறதா நவம்பர் 19-ம் தேதி பார்க்கலாம்” என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்.

 

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: "Modi government asks Rs 1 lakh crore in  the Reserve Bank of India for election expenses: p. Chidambaram blames, தேர்தல் செலவுக்கு ரிசர்வ் வங்கியிடம் ரூ.ஒரு லட்சம் கோடி கேட்கிறது மோடி அரசு’: ப.சிதம்பரம்  குற்றச்சாட்டு
-=-