எம்.பி. பதவியை நடிகர் மிதுன் சக்ரவர்த்தி திடீர் ராஜினாமா

Must read

கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலத்தில் 1950ம் ஆண்டு பிறந்த மிதுன் சக்ரவர்த்தி 1976ம் ஆண்டு முதல் சினிமாவில் நடிக்க தொடங்கினார். ‛டிஸ்கோ டான்சர்’ என்ற படம் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார். திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்.பி.யாக 2014ம் ஆண்டு ஏப்ரல் மாம் 3ம் தேதி முதல் பதவி வகித்து வந்தார்.
தற்போது அவர் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் புயலை கிளப்பிய சகாரா ஊழல் வழக்கில் மிதுன் சக்ரவர்த்தி மீதும் புகார் கூறப்பட்டத. அந்த நிறுவனத்தின் விளம்பர தூதராக மிதுன்சக்ரவர்த்தி செயல்பட்டுள்ளார்.
இது குறித்து அமலாக்க துறை ஏற்கனவே விசாரித்துள்ளது. இந்நிலையில் எம்.பி., பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். ஆனால் உடல் நலம் சரியில்லாத காரணத்தால் ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.

More articles

Latest article