சென்னை,

சென்னையில் இன்று காலை முதலே பல இடங்களில் அதிரடி ரெய்டு நடைபெற்று வருகிறது.

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சசிகலா அணியான அதிமுக அம்மா கட்சியின் சார்பாக சசிகலாவின் அக்காள் மகன் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஓபிஎஸ் அணி சார்பாக மதுசூதனன் போட்டியிடுகிறார்.

வரும் 12ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில், அங்கு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து உள்ளது.

வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் பெருமளவில் வழங்கப்பட்டு வருவதாகவும், அவர்களுக்கு ஆதரவாகவே காவல்துறையினரும் செயல்படுவதாகவும் ஏராளமான புகார்கள் குவிந்து வருகிறது.

இதற்கிடையில் பல கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்ளும்  பணம் பெற்றுக்கொண்டு டிடிவி தினகரனுக்கு ஆதரவாக குரல்கொடுத்து வருகின்றனர்.

நேற்று மாலை நடிகர் சரத்குமார், டிடிவி தினகரனை சந்தித்து பேரம் பேசியதாகவும், அதைத் தொடர்ந்து அவருக்கு ஆதரவு என்று பச்சோந்தியாக மாறிவிட்டார் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், இன்று அதிகாலை முதலே சென்னையில், நடிகர் சரத்குமார் வீடு, அமைச்சர் விஜயபாஸ்கரன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர்.

சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏ விடுதிகள், எழும்பூரில் உள்ள லாட்ஜுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

அதிமுக முன்னாள் எம்.பி., சிட்லபாக்கம் ராஜேந்திரன்,   எம்ஜிஆர் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி வீடு,  பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

குழந்தைசாமி

தமிழக சுகதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் மயிலாப்பூரில் உள்ள அவரது உறவினர்கள் வீடு என சுமார் 30 இடங்களில் வருமானவரித் துறையினர் திடீர் சோதனையில் அதிரடியாக இறங்கியுள்ளனர். சென்னை நந்தனத்தில் உள்ள விஜயபாஸ்கரின் சகோதரி வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னையில் மட்டும், நுங்கம்பாக்கம், தியாகராயர் நகர் உள்ளிட்ட 20 இடங்களில் வரிமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் தமிழ்நாட்டில் பல முக்கிய பிரமுகர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

சென்னை நடைபெற்று வரும் ரெய்டில்  சுமார் ரூ.120 கோடி அளவுக்கு பணம் பட்டுவாடா செய்ய திட்டமிட்டிருந்ததும், அதற்கான ஆவனங்களும் சிக்கியதாக கூறப்படுகிறது.

கீதாலட்சுமி

ஏற்கனவே தமிழக பாரதியஜனதா கட்சி தலைவர் தமிழிசை ஆர்.கே.நகர் தொகுதியில் பணம் பட்டுவாடா நடைபெற்று வருகிறது.. அதன் காரணமாக தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று கூறி வருகிறார்.

அதற்கு தகுந்தார்போல பல இடங்களில் பணம் பட்டுவாடா செய்தவர்கள் கைது செய்யப்பட் டார்கள். இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் ரெய்டில் பணம் பட்டுவாடா செய்ததற்கான ஆவனங்கள் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறையினர் கூறி வருகின்றனர்….

ஆகவே இதை காரணம் காட்டி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்படும் என பரவலாக செய்தி உலா வருகிறது………..