சென்னை: தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனின் மனித நேயத்தின் காரணமாக, கருணைக் கொலைக்கு வந்த சிறுவன், இன்று உடல்நலம் தேறி சொந்த ஊருக்கு திருப்பியுள்ளார்.  கருணை உள்ளத்தோடு ஒரு வருடம் தனது சட்டமன்றம் விடுதியில் தங்க வைத்து காப்பாற்றி வழி அனுப்பி வைத்த அமைச்சர் மா.சு.வுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த சிறுவன்ந ஒருவன் தீக்காயத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், தனது மகனை கருணை கொலை செய்யக்கோரி, குடும்பத்தினருடன் வந்த தாய், கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 2021 டிசம்பரில் மனு கொடுத்தார். அவரது மனுவில்,  கிருஷ்ணகிரி மாவட்டம், வள்ளுவர்புரத்தை சேர்ந்த சரவணன் – சத்யஜோதி தம்பதிகளாகிய எங்களுக்கு, 15, 12 வயதில் இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் எலத்தகிரியிலுள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கின்றனர். எங்களது இளைய மகன் கடந்த ஏப்., 15ல் சானிடைசர் மூலம் கைகளை சுத்தப்படுத்திவிட்டு, வீட்டில் விளையாடியபோது, விறகு அடுப்பில் இருந்த தீ பட்டு உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அவரை கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், சென்னை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்த்தும் குணமாகாமலும், நடக்க முடியாமல் தவிக்கிறார். கூலிவேலை பார்க்கும் எங்களால், மருத்துவ செலவிற்கு பணமின்றியும், மகன் படும் கஷ்டத்தையும் பார்க்க முடியவில்லை. எனவே, அவரை கருணை கொலை செய்ய, ஜனாதிபதிக்கு பரிந்துரைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தார். மனுவை பெற்ற கலெக்டர், அரசு சார்பில் உரிய சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து, சுகாதாரத்துறை அலுவலர்களிடம் மனுவை வழங்கி, உரிய சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினார்.

இதையடுத்து அந்த சிறுவனுக்கு சிறப்பான சிகிச்சை வழங்க அமைச்சர் மா.சுப்பிரமணயின் உத்தரவிட்டார். இதனால், அந்த சிறுவன் குடும்பத்தினர்  சென்னை வரழைக்கப்பட்டு, சென்னை  அரசு மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை வழங்கப்பட்டது. சிகிச்சையையொட்டி, சிறுவனின் பெற்றோர், சென்னையில் உள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு ஒதுக்கப்பட்டுள்ள  சட்டமன்ற விடுதியில்  தங்கி சிகிச்சை பெற்று வந்தனர். கடந்த ஓராண்டாக தங்கி சிகிச்சை பெற்ற கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சூரியகுமார் தீக்காயம்  குணமடைந்துசொந்த ஊர்செல்லும் நிலையில்நேரில் சந்தித்து நலம் விசாரித்து மருத்துவக்குழுவை பாராட்டி அமைச்சர் மா.சுப்பிரமணியன் வாழ்த்தி அனுப்பினார்.