சென்னை: தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் பிரச்சினை குறித்து, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என திமுக வெற்றிக்காக தேர்தல் பணியாற்றிய தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழக அரசியல் கட்சிகளின் அநாகரிக அரசியல் காரணமாகவே தமிழ்நாட்டில், வடமாநிலத்தவர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், சமீப காலமாக இரு தரப்புக்கும் இடையே மோதல் நடைபெற்றதாக வீடியோக்கள் வெளியாகி வட மாநிலங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தமிழ்நாட்டில் பல்வேறு பணிகளில் இருந்து வந்த வடமாநிலத்தவர்கள், தமிழ்நாட்டில் இருந்து வெளியேறினர். இதனால், தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டது.

இதையடுத்து, தமிழகஅரசும், டிஜிபி ஆகியோர் அந்த வீடியோக்கள் குறித்து ஆய்வு செய்து, அது தவறான வீடியோ என விளக்கம் அளித்து, இதுதொடர்பாக வதந்தி பரப்பியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர்கள்மீது வழக்குகள் பாய்கிறது. ஆனால், ஆளும்கட்சி தலைவர்கள், ஆதரவு கட்சியினர் மீது வழக்குகள் பதியப்படவில்லை.

இதற்கிடையில், தமிழ்நாட்டில் ரயில் பயணத்தின்போது பிரசாந்த் கிஷோர் வடமாநிலத்தவர்கள் தமிழர்களால் தாக்கல் செய்யப்பட்டதாக ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். இது தமிழகஅரசியலில் குறிப்பாக திமுகவுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது.

இநத் நிலையில், தற்போது சீமான் வடமாநித்தவர்கள் குறித்து பேசிய வீடியோவை வெளியிட்டுள்ள பிரசாந்த் கிஷோர்,  சீமான் மீது உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும் வீடியோவை இந்தியில் மொழிபெயர்த்து பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பி உள்ளார்.