எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: அழைப்பிதழில் ஸ்டாலின், கனிமொழி, டிடிவி பெயர்கள்….

சென்னை:

மிழக அரசு சார்பில்  கொண்டாடப்பட்டு வரும் தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 100வது ஆண்டு விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்பி. உள்பட பல திமுகவினரின் பெயர்கள் மற்றும்  டிடிவி தினகரன் பெயரும் அழைப்பிதழ் அச்சிடப்பட்டு உள்ளது.

எம்ஜிஆர் நூற்றாண்டு  நிறைவு விழா சென்னையில் வரும் (செப்டம்பர்) 30-ந்தேதி பிரமாண்டமாககொண்டாடப்பட உள்ளது.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை தமிழக அரசு சார்பில் கொண்டாடப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஆண்டு அறிவித்திருந்தார்.  அதைத்தொடர்ந்து எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின் முதல் விழா  மதுரையில் கடந்த 2017ம் ஆண்டு ஜூன் 30ந்தேதி பிரமாண்ட மாக நடைபெற்றது. ஒவ்வொரு மாவட்ட தலைநகரத்திலும் இந்த விழாவை அரசு நடத்தி வந்தது. இதன்  நிறைவு விழா வரும் 30ந்தேதி சென்னையில் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த விழா அழைப்பிதழில் தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான  மு.க.ஸ்டாலின்,  திமுக எம்.பி.க்கள் கனிமொழி, இளங்கோவன் உள்பட திமுக எம்எல்ஏக்கள்  மற்றும் டிடிவி தினகரன்  பெயரும் இடம்பெற்றுள்ளன.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: kanimozhi, MGR Century Festival: Stalin, ttv names in the invitation ...., எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: சிறப்பு நாணயம் வெளியிட கோரி, கனிமொழி, டிடிவி பெயர்கள்....
-=-