சென்னை : ஆன்லைன் மருந்து விற்பனையை கண்டித்து மே 30 ம் தேதி தமிழகம் முழுதும் மருந்து கடைகள் மூடப்படும் என்று தமிழக மருந்து வணிகர்கள் சங்கள் அறிவித்துள்ளன.

.ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க கோரி,  மருந்து வணிகர்கள் அவ்வப்போது கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே, ஆன்லைன் மூலம் மருந்து விற்பனையை அனுமதிக்க ஏராளமான கோரிக்கைகள் மத்திய அரசுக்கு வந்தன.

இந்த நிலையில் மத்திய சுகாதாரத் துறை தற்காலிகமாக ஒரு கமிட்டியை அமைத்து ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்வது குறித்து ஆய்வு நடத்தியது.
அந்த கமிட்டி,  ஆன்லைனில் மருந்து விற்பனையை அனுமதிக்கலாம் என பரிந்துரைத்தது.

இதையடுத்து ஆன்லைனில் மருந்து விற்பனையை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை எதிர்த்து நாடு முழுவதம் மே 30 ம் தேதி மருந்து கடைகளை அடைத்து போராட்டம் நடத்த உள்ளதாக மருந்து வணிகர் சங்கங்கள் அறிவித்துள்ளன..