டில்லி,

குஜராத்தில் உள்ள  அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியை உடனடியாக  பதவி விலக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.. இது நீதித்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

குஜராத்தில் நடைபெற்ற மருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேட்டில் அம்மாநில உயர்நீதி மன்ற நீதிபதி நாராயண் சுக்லா ஈடுபட்டதாக இந்திய மருத்துவ கவுன்சில் ( எம்சிஐ) புகார் கூறியது.

இதுகுறித்து விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி நாராயண் சுக்லாவுக்கு எதிரான ஆதாரங்களுடன் உச்சநீதி மன்ற தலைமை  மிஸ்ராவை அணுகி ஆதாரங்களை தாக்கல் செய்தனர்.

அதைத்தொடர்ந்து,  தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா  இதுகுறித்து விசாரணை நடத்த விசாரணை நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்தார். இந்த குழுவுக்கு, தற்போதைய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமை வகித்தார்.

அவர்  தலைமையிலான குழு, ஜனவரி 20 மற்றும் ஜனவரி 21 ஆகிய தேதிகளில், விசாரணை அறிக்கையை தலைமை நீதிபதி  மிஸ்ராவுக்கு  சமர்ப்பித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதில், அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்ததால், அவரை  பதவி விலக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உத்தரவிட்டார்.

அவரது  உத்தரவின் பேரில் அலகாபாத் நீதிமன்றம் அவரை பதவி விலகும்படி கூறியது. ஆனால், பதவி விலக மறுப்பதால், அவருக்கான பணிகள்  பறிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.