‘சர்வம் தாள மயம்’ படத்தின் செகன்ட் சிங்கிள் வெளியானது

ஜி.வி.பிரகாஷின் ‘சர்வம் தாள மயம்’ ‘ படத்தின் செகன்ட் சிங்கிள் வெளியானது. ஏற்கனவே முதல் சிங்கிள் வெளியான நிலையில் நேற்று மாலை 2வது சிங்கிள் வெளியிடப்பட்டது.

பிரபல  இயக்குனர் ராஜீவ் மேனன்  இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் படம் சர்வம் தாள மயம். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி  நல்ல வரவேற்புப் பெற்ற நிலையில், சர்வம் தாள மயம் திரைப்படத்தின் டைட்டில் ட்ராக் பாடல் கடந்த நவம்பர் மாதம் 30ந்தேதி மாலை வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது.

இந்த படத்தை ராஜிவ் மேனன் நிறுவனமே தயாரிக்க ஏர். ரகுமான் இசை அமைத்துள்ளார். படத்தில்  ஜிவி பிரகாசுடன் அபர்ணா பாலமுரளி , நெடுமுடி வேணு, வினித் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங் களில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க இசையை அடிப்படையாக கொண்டு படம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த படத்திற்கு பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் வாழ்த்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 'சர்வம் தாள மயம்' படத்தின் செகன்ட் சிங்கிள் வெளியானது, Maya Maya - Tamil Lyrical Video released G.V. Prakash 'Sarvam Thaalam Mayam'
-=-