“சேர்ந்தே இருப்பது…” பட்டியலில் “மனுஷ்யபுத்திரன்  – சர்ச்சை”  என்றும் சேர்த்து விடலாம்.

சக கவிஞரை, “இணைய பொறுக்கி” என்று அவர் முகநூலில் எழுதியது குறித்த சர்ச்சை விவாதத்திற்குள்ளாகியிருக்கும் நிலையில்,  “பிரபல எழுத்தாளர் பிரபஞ்சனை தன்னிலை அறியாதவர் என்று மனுஷ்யபுத்திரன் அவமதித்துவிட்டார்” என்று ஒரு சர்ச்சை கிளம்பியிருக்கிறது.

தனது உயிர்மை பதிப்பகம் சார்பாக, சுஜாதா விருது அளிக்கும் விழாவை நேற்று நடத்தினார் மனுஷ்யபுத்திரன். நிகழ்ச்சிக்கு தலைமையேற்பதாக இருந்த பிரபல எழுத்தாளர் வரவில்லை. இது குறித்து இன்று தனது முகநூல் பக்கத்தில் மனுஷ்யபுத்திரன் எழுதியிருக்கிறார்.

அந்த பதிவில், “ தலைமை ஏற்பதாக இருந்த பிரபஞ்சன் ஏன் வரவில்லை என்பது பிரபஞ்சனுக்கே தெரியுமா என்று தெரியவில்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பிரபஞ்சன்

இதுதான் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

இது குறித்து கவிஞர் லஷ்மி சரவணக்குமார், “மனுஷ்யபுத்திரன் மனநோயாளி, நாய்க்கு வெறிபிடித்தால் யாரையாவது பார்த்து குறைத்துக்கொண்டே இருக்கும். அது போல, எப்போதும் தான் டிரண்டில் இருக்க வேண்டும் என்பதால் ஏதாவது பேசிக்கொண்டே இருப்பார் அவரது பேச்சு, எழுத்தை புறம்தள்ளி கடந்து செல்வதே புத்திசாலித்தனம்” என்றார்.

மேலும் சில படைப்பாளிகள், “தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களின் பிரபஞ்சனும் ஒருவர். அவர், நிகழ்ச்சிக்கு வரவில்லை என்பதற்காக தன்னிலை அறியாதவர் என்பது போல மனுஷ்யபுத்திரன் குறிப்பிட்டு இழிவு படுத்தியிருக்கிறார். நல்ல மனநிலை, மற்றும் உடல் நிலையுடன் இருக்கும் பிரபஞ்சனை,  “தான் ஏன் நிகழ்ச்சிக்கு வரவில்லை என்பது பிரபஞ்சனுக்கே தெரியுமா என்று தெரியவில்லை” என்று எழுவது நாகரீகமல்ல.

அதே பதிவில், “நான் வன்முறைக்கு ஆளாக்கபடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எனது நியாயங்களுக்காக நிற்பவர்களை  நன்றியுடன்   எங்களை அன்பினால் வெல்லலாம். அவதுறுகளால் வெறுப்பினால் ஒருபோதும் வெல்ல முடியாது” என்று குறிப்பிட்டிருக்கிறார் மனுஷ்யபுத்திரன்.

இவர் மட்டும் பிறரை அடுத்தவரை வன்முறைக்கு ஆளாக்கலாமா.. அவதூறு செய்யலாமா” என்று ஆதங்கப்படுகிறார்கள்.

மனுஷ்யபுத்திரன்

இது குறித்து எழுத்தாளர் பிரபஞ்சனை தொடர்பு கொண்டு கேட்டபோது, “மறதி என்கிற அர்த்தத்தில் எழுதியிருப்பதாக நினைத்துக்கொள்கிறேன். தகவல் தெரிவிக்க முடியவில்லை.

திடீரென குடும்ப ரீதியான ஒரு பிரச்சினை. அதனால் சென்னையிலிருந்து 130 மைல் தூரத்தில் உள்ள ஒரு இடத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது. அங்கு  இப்போது முடிந்துவிடும், அப்போது முடிந்துவிடும் என்று நினைத்த பேச்சுக்கள் நீண்டு கொண்டே போய்விட்டன. போன் செய்து தகவல் சொல்ல அந்த நிலையில் தோன்றவில்லை. அதற்குள் நேரம் கடந்துவிட்டது. விழா முடிந்திருக்கும் என்பதால் பிறகும் தகவல் சொல்லவில்லை” என்றார்.

 

மனுஷ்யபுத்திரன் முகநூல் பதிவு

மேலும், “மனுஷ்யபுத்திரன் என்னை கீழ்த்தரமாக எழுதியிருப்பதாக நான் நினைக்கவில்லை. மறதி காரணமாக நான் வரவில்லை, விளக்கம் சொல்ல வில்லை என்று நட்புரிமையோடு எழுதியிருக்கிறார் என்றே நினைக்கிறேன். இதை பெரிய விசயமாக – சர்ச்சையாக ஆக்க விரும்பவில்லை” என்று நிதானமாகச் சொல்லி முடித்தார் பிரபஞ்சன்.