சீனாவை மிரட்டும் ’ மங்குட் ‘ புயல் – சுமார் 25 லட்சம் பேர் வெளியேற்றம்

162 கி.மீ. வேகத்தில் சீனாவை சூறையாடிய புயலால் 25 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர். புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் மூவாயிரத்திற்கும் அதிகமான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

mangkhut

தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தை நோக்கி மங்குட் புயல் வருவதாக எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 25லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டின் ககாயன் மாகாணத்தில் உள்ள லூஷான் தீவில் ‘மங்குட்’ என் பெயரிடப்பட்ட புயல் நேற்று கடுமையாக தாக்கியது. அதையடுத்து பக்காயோ என்ற இடத்தில் இன்று கரையை கடந்தது.

இந்நிலையில் மங்குட் புயல் தெற்கு சீனாவை தாக்கும் என எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இதன் காரணமாக மணிக்கு 305 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியதில், இரண்டு மீட்புப்படை வீரர்கள் உள்பட 49 பேர் உயிரிழந்தனர். புயலினால் பெய்த கனமழை காரணமாக அப்பகுதி முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது. குவாங்டாங் மாகணத்தில் உள்ள ஜிங்மன் கடற்பகுதியில் சுமார் 162 கிமீ வேகத்தில் காற்று வீசியது.

இதையடுத்து அப்பகுதியில் உள்ள 25 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 48 ஆயிரம் படகுகள் உடனடியாக கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டன. வெளியேற்றப்பட்ட மக்களுக்காக 3 ஆயிரத்து 777 அவசர முகாம்கள் அமைக்கப்பட்டு அத்யாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

புயலினால் ஏற்பட்ட பாதிப்புக்களை தொடர்ந்து மீட்பு பணிகளில் ராணுவம் மற்றும் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
English Summary
Mangkhut hits China; over 2.45 million people evacuated