வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன், ஸ்மிருதி வெங்கட், சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம், ‘மன்மத லீலை’.
நடித்தவர்கள், இசை அமைத்த பிரேம்ஜி, ஒளிப்பதிவு செய்த தமிழ் அழகன் எல்லோரும் படத்துக்கு பலம். ஆனால் படமே பலமாக இல்லையே!
சொதப்பலான கதை, திரைக்கதை, இயக்கம் செய்திருக்கிறார் வெங்கட் பிரபு.
இதனால் பட உருவாக்கத்தில் ஈடுபட்ட மற்றவர்கள் உழைப்பும் வீண்.
இடைவேளைவரை அசோக் செல்வன், யாராவது ஒருவருடன் குடித்துக்கொண்டே இருக்கிறார். இப்படி குடித்தால் உயிரோடே இருக்க முடியாது. ஆனால் பார்க்கும் பெண்களை எல்லாம் கவர்ந்து ‘பயன்படுத்திக்’ கொள்கிறாராம்; ‘கரெக்ட்’ செய்து விடுகிறாராம்.
பெண்கள் உண்வும் உயிருமுள்ள மனிதர்கள் என்பதையே உணராது, அவர்களை பண்டமாக பார்க்கும் இயக்குநரின் கண்ணோட்டமே தவறு.
அலுக்க வைக்கும் காட்சிகள், திருப்பங்கள் இல்லாத கதை அமைப்பு!
கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1976ஆம் ஆண்டு வெளியான த ‘மன்மத லீலை’ படமே பலவித விமர்சனங்களுக்கு ஆளானது. ஆனாலும் சுவாரஸ்யத்துக்கு குறைவில்லை.
வெங்கட் பிரபுவின் மன்மத லீலையிலும் விமர்சிக்க ஏராளமான விசயங்கள் உண்டு. ஆனால் சுவாரஸ்யமும் இல்லை.