திருவனந்தபுரம்,

கேரளா பள்ளிகளில் மலையாளம் கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்ற அவசர சட்டத்திற்கு தமிழகத்தை சேர்ந்த ஆளுநர் சதாசிவம் கையெழுத்திட்டுள்ளார்.

இதன் காரணமாக மாநிலத்தில் உள்ள சிபிஎஸ்இ உள்பட அனைத்து வகை பள்ளி களிலும் பிளஸ்-2 வரை மலையாள மொழி பாடம் கட்டாயம் என்ற அவசரம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின்படி, அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு உதவி பெறாத பள்ளிகள், சுய நிதி கல்வி நிறுவனங்கள், சிபிஎஸ்இ,  ஐசிஎஸ்இ என அனைத்து வகை பள்ளிகளிலும் மலை யாளம் கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்று இந்த அவசர சட்ட திருத்ததில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஏற்கனவே நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த அவசர சட்டம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அதில் தமிழகத்தை சேர்ந்த ஆளுநர் சதாசிவம் கையெழுத்திட்டு ஒப்புதல் வழங்கினார்.

இதன் காரணமாக வரும் கல்வி ஆண்டு முதலே இந்த சட்டம் அமல்படுத்தப்படுவதாவும், மே 1ம் தேதி முதல் சட்டம் அமலுக்கு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது

மேலும், இந்த சட்டத்தின் வாயிலாக, மலையாளம் கற்பிக்காத பள்ளிகளுக்கு. மிக அதிக அளவு அபராதம் விதிக்கப்படும் என்றும், அதற்கு காரணமாக உள்ள  ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சட்டம் வகை செய்கிறது.