முதன்முதலாக மலையாள நடிகை  ஒருவர் சுத்த தமிழில் டப்பிங் பேசியிருக்கிறார் என்று பெருமிதப்பட்டிருக்கிறார் இயக்குநர் மிஷ்கின்.

இவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரிக்க.. ஜி.ஆர்..ஆதித்யா இயக்கும் படம், “சவரக்கத்தி”.

இதன் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.

பூர்ணா

இந்தப்படத்தில் நடித்துள்ள  இயக்குநர் ராம், நடிகை பூர்ணா, இயக்குநர் மிஷ்கின், கீதா ஆனந்த், இசையமைப்பாளர் அரோல் குரோலி, ஒளிப்பதிவாளர் கார்த்திக், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், சண்டை பயிற்சியாளர் தினேஷ் குமார் உட்பட பலர், இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் மிஷ்கின் பேசியதுதான் ஹைலைட்.

“என்னுடைய தம்பியும், இப்படத்தின் இயக்குநருமான ஆதித்யாவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். படத்தின் போஸ்டர்களில் அவருடைய பெயரைவிட என்னுடைய பெயரை இதற்குக் காரணம், படத்தை வாங்கியவர்கள்தான்.

என் பெயர் பெரிதாக இருந்தால் வியாபாரம் நன்றாக இருக்கும் என்று இப்படிச் செய்துவிட்டார்கள்.

 

மிஷ்கின்

மற்றபடி, எனக்கு எப்போதும் விளம்பரங்களில் என்னுடைய பெயரை பெரிதாக போடுவது பிடித்தமானது அல்ல.

நான் இறந்து ஐம்பது வருடங்கள் கழித்தும் என்னை பற்றியும், நான் எடுத்த படம் இது என்றும் அனைவரும் பேசினாலே எனக்கு திருப்தி” என்றார்.

தொடர்ந்து, “தமிழ்த் திரையுலக வரலாற்றில் முதன்முறையாக மலையாள நடிகை ஒருவர் தமிழ் படத்தில் சொந்தக் குரலில், சுத்த தமிழில் டப்பிங் பேசியுள்ளார். அது  சவரக்கத்தி படத்தில்தான். அந்த நடிகை பூர்ணாதான்.

இந்த படத்துக்காக அவர் சொந்த குரலில் சுத்த தமிழில் டப்பிங் பேசியுள்ளார். இந்தப் படத்தை 9௦% வெற்றியை நான் பூர்ணாவுக்கு சமர்ப்பிக்கிறேன். 1௦% வெற்றியை இதில் நடித்துள்ள இயக்குநர் ராமுக்கு சமர்ப்பிக்கிறேன்” என்றார் மிஷ்கின்.