பராமரிப்பு பணி: நாளை கடற்கரை தாம்பரம் மின்சார ரெயில் சேவை மாற்றம்!

சென்னை:

ராமரிப்பு பணி காரணமாக நாளை சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை செல்லும் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பல சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்னக ரெயில்வே விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,

ரத்து செய்யப்பட்டுள்ள ரெயில் சேவைகள்:

கடற்கரை-தாம்பரம் இடையே   காலை 9.12, 9.25, 9.42, 10, 10.20, 10.40, 10.45, 10.50, 11.10, 11.20, 11.40, 11.50, 12.10, 12.20, 12.40, 12.50 மணி மின்சார ரெயில்களும்,

தாம்பரம்-கடற்கரை காலை 9.50, 10, 10.20, 10.40, 10.50, 11.10, 11.20, 11.50, 12, 12.30, 12.50, 1.15, 1.30, 2, 2.15 மணி ரெயில்களும் நாளை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் இயக்கப்படும் ரெயில்கள்:

கடற்கரை-தாம்பரம் காலை 10.30, 11.30, 1 மணி ரெயில்களும், தாம்பரம்-கடற்கரை காலை 10.10 மணி ரெயிலும், கடற்கரை-செங்கல்பட்டு காலை 9.35, 10.15, 11, 12, 12.30, 1.15, 1.45 மணி ரெயில்களும், செங்கல்பட்டு-கடற்கரை காலை 9.40, 10.50, 11.50, 12.15, 1 மணி ரெயில்களும் நாளை எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் இயக்கப்படும்.

கடற்கரை-திருமால்பூர் காலை 9.50, 1.30 மணி ரெயில், திருமால்பூர்-கடற்கரை காலை 8, 10.25 மணி ரெயில்களும் நாளை எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் இயக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




English Summary
Maintenance work: Chennai Beach to Tambaram electric train services changed Tomorrow. May train services cancel and some train service will run express rail way