சென்னை: குட்கா, பான் மசாலா மீதான தமிழ்நாடு அரசின் தடை உத்தரவை  சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்துஉத்தரவிட்டு உள்ளது. உணவு பாதுகாப்பு சட்டத்தில் அவசர நிலை கருதி தற்காலிகமாக தடை செய்ய மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில்,. 2006ஆம் ஆண்டு இயற்றப்பட்ட உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா மற்றும் புகையூட்டப்படும் புகையிலைப் போன்ற பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். ஆண்டுதோறும் இந்த உத்தரவு தொடர்பாக அறிவிப்பு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு வந்தன. அதன்படி, பல நிறுவனங்களின் அரசின் உத்தரவை மீறி செயல்படுவதை கண்டறிந்து  நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அரசின் தடையாணையை எதிர்த்து பல நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்தன. இந்த வழக்குகள் உயர்நீதிமன்ற நீதிபதிகள்  ஆர்.சுப்ரமணியன் மற்றும் குமரேஷ் பாபு அடங்கிய அமர்வில், கடந்த சில ஆண்டுகளாக விசாரணை  நடைபெற்று வந்தது.

இந்த வழக்கின் இறுதி விசாரணைகளைத் தொடர்ந்து, உணவு பாதுகாப்பு சட்டத்தில் அவசர நிலை கருதி தற்காலிகமாக தடை செய்ய மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது  புகையிலையை உணவுப் பொருளாக சுட்டிக்காட்டவில்லை என்று கூறிய நீதிபதிகள், புகையிலை சிகரெட் போன்ற பொருட்களின் விளம்பரங்களை முறைப்படுத்துவதுப் பற்றி மட்டும் தான் கொடுக்கப்பட்டுள்ளது- எனவே, தமிழ்நாடு அரசின் குட்கா, பான் மசாலா மீதான தமிழ்நாடு அரசின் தடை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டடனர்.

மேலும், இந்த சட்டத்தின்கீழ், தடை உத்தரவை மீறியதாக நிறுவனங்களின் மீது  எடுக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகளையும் ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  மேலும், உணவு பாதுகாப்பு சட்டத்தில் அவசர நிலை கருதி தற்காலிகமாக தடை செய்ய மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.