ஸ்ரீநகர்: காஷமீர் மாநிலத்தின் மலைப்பகுதிகளில் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மேம்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ‘மத்திய அரசுக்கு பயங்கரவாத அமைப்புகள் திடீர் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இந்தியாவில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சகம் சார்பில் நாட்டில் பல்வேறு இடங்களில் கனிமங்கள், தாது பொருட்கள் சார்ந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சகம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜம்மு-காஷ்மீரில் நடத்தப்பட்ட ஆய்வில்  ஜம்மு-காஷ்மீரின் ரைசி மாவட்டத்தில் சலால்-ஹைமனா பகுதியில் லித்தியம் கனிமம் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 5.9 மில்லியன் டன் லித்தியம் கனிமம் அந்த பகுதியில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதிகரித்து மாசுவை குறைக்கும் வகையில், உலக நாடுகள் மின்வாகனத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கும் நிலையில்,  மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகள் தயாரிப்பில் முக்கிய மூலப்பெருளான லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது உலக நாடுகளை இந்தியாவை நோக்கி பார்க்க வைத்துள்ளது.

செல்போன், லேப்டாப், டிஜிட்டல் கேமரா உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்கு பயன்படுத்தப்படும் பேட்டரியின் முக்கிய மூலப்பொருளாக லித்தியம் அவசயம் என்பதால்,  லித்தியத்தின் தேவை என்பது அதிகமாக உள்ளது.

இந்த நிலையில் தான் ஜம்மு காஷ்மீரில் உள்ள ரியாசி மாவட்டம் சலால்-ஹைமானா பகுதியில் 5.9 மில்லியன் டன்(59 லட்சம் டன்) லித்தியம் உலோகத்தின் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உலகளவில் லித்தியம் இருப்பில் சிலிக்கு அடுத்தபடியாக இந்தியா 2வது இடத்தை பிடிக்க உள்ளதால் ஒட்டு மொத்த உலகத்தின் பார்வையும் இந்தியாவின் பக்கம் திரும்பி உள்ளது.

தற்போதைய நிலையில், லித்தியம் கனிமத்தை 100 சதவிகிதம் இறக்குமதி செய்யும் இந்தியா தற்போது காஷ்மீரில் கனிமம் கண்டுபிடிக்கப்பட்டதால் அது சார்ந்த இறக்குமதி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்தியாவின் முன்னேற்றத்தை தடுக்கும் வகையில், பயங்கரவாத அமைப்புகள் மிரட்டல் விடுத்து வருகின்றன. மலைப்பகுதிகளிலும், காடுகளிலும் முகாம் அமைத்து, பயங்கரவா தாக்குதலை நடத்தி வரும் பயங்கரவாத அமைப்புகள், ஜம்மு-காஷ்மீரின் வளங்களை திருடவிடமாட்டோம் என பெயரில்  என்று மத்திய அரசை மிரட்டி வருகிறது. லித்தியம் எடுக்கும் முயற்சியில் ஜம்மு-காஷ்மீருக்கு நுழைய நினைக்கும் இந்திய நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம். ஜம்மு-காஷ்மீர் மட்டுமின்றி இந்தியாவுக்குள்ளும் தாக்குதல் நடத்துவோம் என்று  எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.