டெல்லி: பொழுதுப்போக்கு செயலியான டிக்டாக் (TIKTOK)  இந்தியாவில் தனது அனைத்து ஊழியர்களையும் பணிநீக்கம் செய்வதாக அறிவித்து உள்ளது.

டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 திறன்பேசி செயலிகளை  இந்திய அரசு கடந்த 2020ம் ஆண்டு ஜுன்  மாதம் தடை செய்து  உத்தரவிட்ட்டது.. இந்தியா – சீனா இடையே எல்லைப்பகுதியில் நடைபெற்ற மோதலுக்கு பிறகு சீன நிறுவனங்கள் மற்றும் அவற்றுக்கு சொந்தமான செயலிகளை இந்தியாவில் தடைசெய்ய வேண்டுமென்ற கோரிக்கை நாட்டின் பல்வேறு மட்டங்களில் வைக்கப்பட்டு வந்தது. மேலும் சீன செயலிகள் மூலம் இந்தியர்களின் தரவுகள் திருடப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதையடுத்து, மேலும் ஏராளமான சீன செயலிகள் அவ்வப்போது தடை செய்யப்பட்டு வருகிறது,

இந்த நிலையில், சீன செயலியான TikTok தனது முழு இந்திய பணியாளர்களையும் பணிநீக்கம்செய்வதாக அறிவித்துள்ளது. பிப்ரவரி மாத இறுதியுடன் அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு   ஒன்பது மாத பணிநீக்க ஊதியம் வழங்கப்படும் என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

 சீன பயன்பாடுகள் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டின் காரணமாக, இந்தியாவில் செயல்பாட்டை மறுதொடக்கம் செய்யப் போவதில்லை என்று தெரிவிக்கப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும்,  இந்திய அரசாங்கம் தடை செய்த பின்னர், தேசிய பாதுகாப்பை  காரணம் காட்டி இந்திய ஊழியர்கள் பெரும்பாலும் பிரேசில் மற்றும் துபாயில் பணிபுரிந்து வந்தனர். ஆனால், தற்போது அவர்களையும் பணி நீக்கம் செய்துள்ளது.