டெல்லி:

ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் இருந்து அத்வானியை வெளியேற்றுவதற்காகவே பாபர் மசூதி இடிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க பிரதமர் மோடி சதி செய்துள்ளார் என்ற லாலு பிரசாத் யாதவின் குற்றச்சாட்டு உண்மையே என்று பாஜ ராஜ்யசபா எம்பி வினய் கத்தியார் தெரிவித்துள்ளார்.

பாபர் மசூதி தொடர்பான உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு லாலு வரவேற்பு தெரிவித்துள்ளார். எனினும் இ ந்த வழக்கை விசாரிக்கும் சிபிஐ பிரதமரின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது. அரசு நினைப்பதை தான் சிபிஐ செய்யும் என்பது அனைவரும் அறிந்த விஷயம் என்று லாலு தெரிவித்திருந்தார்.
எம்பி கத்தியார் மேலும் கூறுகையில், ‘‘ பாஜ தலைவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரம் கிடையாது’’ என்று தெரிவித்தார்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, ஜோஷில உமாபாரதி, கட்டியார், சத்வி ரிதம்பாரா, விஹெச்பி தலைவர் விஷ்ணு ஹரி டால்மியா ஆகியோர் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். மேலும், குற்றம்சாட்டப்பட்டிருந்த கிரிராஜ் கிஷோர், அசோக் சிங்கால் ஆகியோர் ஆகியோர் இறந்துவிட்டனர்.