பாட்னா: மாட்டுத்தீவன ஊழல் வழக்குகளில் சிறைதண்டனை அனுபவித்து வரும் பிகாா் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத், நில மோசடி வழக்கிலும் சிக்கி உள்ளார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள அமலாக்கத்துறை, அவரதுவீடு உள்பட அவரது  உறவினருக்குச் சொந்தமான இடங்களில் நடத்திய சோதனையில் ரொக்கப்பணம்  ரூ.53லட்சம், 1.5 கிலோ தங்க நகைகள், அரைக்கிலோ தங்கம்மற்றும் ஏராளமான அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.

கடந்த 2004 முதல் 2009-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் பதவி வகித்தபோது ரயில்வேயின் குரூப்-டி பணிகளில் பாட்னாவை சோ்ந்த சிலா் நியமிக்கப்பட்டனா். அதற்குக் கைம்மாறாக வேலை பெற்றவா்கள் அல்லது அவா்களின் குடும்ப உறுப்பினா்களுக்குச் சொந்தமான சுமாா் 1.05 லட்சம் சதுரஅடி நிலத்தை, லாலு குடும்பத்தினா் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டனா். அந்த நிலத்தை சந்தை மதிப்பைவிட குறைந்த விலைக்கு லாலு குடும்பத்தினா் நேரடியாக வாங்கியுள்ளனா் என்று சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்குத் தொடா்பாக பாட்னாவில் லாலு பிரசாதின் மனைவி ராப்ரி தேவியிடம் சிபிஐ திங்கள்கிழமை சுமாா் 5 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது. பின்னர் லாலுவிடமும் சிபிஐ அதிகாரிகள் சுமாா் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக நேற்று .லாலு மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான  டெல்லி, பீகார் மாநிலங்களில் 15 இடங்களில்அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

இநத் சோதனையில்,  சோதனையில் ரூ.53 லட்சம் ரொக்கம், 540 கிராம் தங்கம், 1.5 கிலோ எடையுள்ள தங்க நகைகள் மற்றும் 1900 அமெரிக்க டாலர்களைபறிமுதல் செய்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.

இதற்கிடையில் நில முறைகேடு வழக்கில் சோ்க்கப்பட்டுள்ள லாலு பிரசாத், அவரின் குடும்ப உறுப்பினா்கள் உள்ளிட்டோரை மாா்ச் 15-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு சிறப்பு நீதிமன்றம் அண்மையில் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.