ண்டன்

னில் கும்ப்ளே கிரிக்கெட் கோச் பதவியிலிருந்து ராஜினாமா செய்தது விராட் கோஹ்லியால் தான் என செய்தி உலவுகிறது.

அனில் கும்ப்ளே ராஜினாமா செய்தது அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் அதிர வைத்துள்ளது.  விராட் கோஹ்லிக்கும் கும்ப்ளேவுக்கும் இடையே கருத்து வேற்றுமை இருந்த போதிலும் அவர் தொடர்ந்து கோச்சாக நீடிப்பார் என நம்பப் பட்டது.   கும்ப்ளேவை வெஸ்ட் இண்டீஸ் குறுகிய கால டூருக்கு பிசிசிஐ டீமுடன் அனுப்பினால், அங்கு இருவரும் கலந்துரையாடி, ஒரு சமாதானத்துக்கு வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

லண்டனிலிருந்து கிரிக்கெட் வீரர்களுடன் கும்ப்ளே திரும்ப வரவில்லை.  அவருக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருப்பதாக பிசிசிஐ தெரிவித்தது.  ஆனால் சில மணி நேரத்துக்குள் கும்ப்ளேவின் ராஜினாமா கடிதம் வந்து சேர்ந்தது.  கோஹ்லி தனக்கும் கும்ப்ளேவுக்கும் உள்ள கருத்து வேறுபாடுதான் ராஜினாமாவுக்கு காரணம் என்பதை மறுத்துள்ளார்.

ஆனால் கோஹ்லி அட்வைசரி கமிட்டியிடம் கும்ப்ளே பற்றி புகார் அளித்ததாகவும், அதற்காக கமிட்டி கும்ப்ளேவிடம் ரகசிய விசாரணை நடத்தியதால் கோவமுற்று கும்ப்ளே ராஜினாமா செய்ததாக பெயர் தெரிவிக்க விரும்பாத கமிட்டி மெம்பர் ஒருவர் தகவல் அளித்துள்ளார்.   அட்வைசரி கமிட்டி கும்ப்ளே கோச்சாக தொடரவேண்டும் என விருப்பம் தெரிவித்தது எனவும்  அடுத்து வரும் கோச்சுடனும் இதே போல கோஹ்லி நடந்துக்கொள்ள மாட்டார் என்பதற்கும் உத்திரவாதமில்லை எனவும் கூறி உள்ளார்,

ஆனால் கும்ப்ளேவின் ராஜினாமா இந்திய டீமுக்கு ஒரு இழப்பாகவே இருக்கும் என கிரிக்கெட் ரசிகர்கள் கருதுகின்றனர்