கோமளவல்லி  என்பது ஜெயலலிதாவின் பெயரே அல்ல ! :சர்கார் குறித்து டிடிவி தினகரன்  கருத்து 

டிகர் விஜய் நடித்த சர்கார் திரைப்படத்தில் வில்ல கதாபாத்திரத்துக்கு ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமலவள்ளி என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்திருக்கும் நிலையில், “கோமலவள்ளி என்பது ஜெயலலிதாவின் பெயரே அல்ல” என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சர்கார் படத்தில் கோமலவள்ளி கதாபாத்திரத்தில் வரலட்சுமி – டிடிவி தினகரன்

விஜய் நடிக்க .ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் திரைப்படம் நேற்று முன்தினம் தீபாவளி அன்று உலகம் முழுதும் வெளியானது.

இந்தப் படத்தில், விஜய் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார். அவருடன்  கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில் புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியது. தி ரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்திற்கு கோமளவல்லி என்ற பெயர் இருக்கிறது. இப்பெயர் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயர் இது என்று சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் கோமளவல்லி என்பது ஜெயலலிதாவின் பெயரே அல்ல என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.  தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் “தன் பெயர் கோமளவல்லி அல்ல என ஜெயலலிதாவே என்னிடம் கூறியுள்ளார். திரைப்படத்தில் கூட அந்தப் பெயரில் தான் நடித்ததில்லை என்றும்  ஜெயலலிதா என்னிடம் கூறினார்” என்ற தினகரன், “ஜெயலலிதா குறித்து தவறான கருத்து இடம் பெற்றிருந்தால் எதிர்ப்பு தெரிவிப்பேன்” என்றும் கூறியுள்ளார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: komalvalli is not the name of Jayalalithaa said ttv dinakaran, கோமளவல்லி  என்பது ஜெயலலிதாவின் பெயரே அல்ல ! :சர்கார் குறித்து டிடிவி தினகரன்  கருத்து
-=-