கேரளா: வெள்ளத்தில் பாதித்தவர்களுக்கு புதிய பாஸ்போர்ட்….சுஸ்மா சுவராஜ்

டில்லி:

கேரளாவில் கன மழை காரணமாக அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக ஒரே நேரத்தில் 22 அணைகள் திறந்து விடப்பட்டுள்ளது.

இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழையினால் ஏற்பட்ட, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 37 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். மீட்புப் பணிகளில் ராணுவம், கப்பற்படையினர் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
மாநிலத்தின் பல பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் பல லட்சம் மக்கள் முகாம்களில் தங்கியுள்ளனர்.

வெள்ளத்தால் சேதமடைந்த பாஸ்போர்ட்களுக்கு பதிலாக கட்டணமின்றி மாற்று பாஸ்போர்ட்கள் வழங்கப்படும் என மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் அறிவித்துள்ளார். ‘‘கேரளாவில் முன் எப்போதும் இல்லாத அளவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு நிலைமை சீரடைந்ததும் வெள்ளத்தில் நனைந்து சேதமான பாஸ்போர்ட்களுக்கு பதிலாக புதிய பாஸ்போர்ட்கள் கட்டணமின்றி வழங்கப்படும்’’ என்றார்.
English Summary
Kerala: New passport will issued for damaged passport in flood says Sushma Swaraj