டெல்லி: நாடு முழுவதும் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளிகளில் காலியாக உள்ள  முதுநிலை ஆசிரியர், தொடக்க கல்வி ஆசிரியர், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 13,404 பல்வேறு காலி பணியிடங்களுக்கு விரைவில் ஆட்சேர்ப்பு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கேந்திர வித்தியாலயா பள்ளிகளிலும்  1162 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்த காலி இடங்கள் நிரப்புவது  தொடர்பான அதிகாரப்பூர் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும், அதில் வயது வரம்பு, தேவையான கல்வித்தகுதி, கட்டணம், தேர்வு விவரம், எவ்வாறு விண்ணப்பிப்பது என்பன போன்ற விவரங்கள் கொடுக்கப்படும் என டெல்லி பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இந்த காலி இடஒதுக்கீட்டின் படி நிரப்பட உள்ளதாகவும்,  பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகையும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, காலியாக உள்ள பதவிகளான, உதவி ஆணையர் – 52, தலைமை ஆசிரியர் – 239, துணை தலைமை ஆசிரியர்- 203, முதுநிலை ஆசிரியர் – 1409, பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் – 3176, தொடக்க கல்வி ஆசிரியர் -6414

தொடக்க கல்வி (இசை )-303, Librarian நூலகர் -355, Finance Officer நிதி அலுவலர் – 6, உதவி பொறியாளர்- 2, உதவி செக்சன் அலுவலர் -156, சீனியர் செயலக உதவியாளர்-322, இளநிலை செயலக உதவியாளர் – 702, இந்தி மொழிபெயர்ப்பாளர் – 11, சுருக்கெழுத்தாளர் – 2ம்நிலை – 54 என மொத்தம் 13,404 இடங்கள் நிரப்பப்ட உள்ளது.

இதற்கான அறிவிப்பு விரைவில் இணையதளங்களில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விவரங்களை தெரிந்து கொள்ள https://kvsangathan.nic.in/ என்ற இணைய தளத்தை பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.