பொறியியல் படித்துவிட்டு வியில் வீணாபோகம ஊரச்சுத்துற நாயகன். அவனுக்கு நாலு ப்ரண்டுங்க. அதுல ஒரு காமெடியன். எப்பவும் மது, சிகரெட்.

பொறுக்க முடியாத அப்பா ஏதோ சொல்ல, ரோசம் வந்த நாயகன் சென்னைக்கு புறப்படுறான்.

‘சரி, ஒரு பாட்டு முடியறதுக்குள்ள பெரிய கோடீசுவரன் ஆயிருவான்… அதோட ஒரு ஹீரோயின் வேற கிடைச்சிரும்..’னு நெனச்சா, படம் வேற, வேற லெவல்ல இருக்கு.

கிராமத்துலேருந்து சென்னை வர்ற ஹீரோ, தன்னோட நண்பன் வாடகைக்கு இருக்கும் அறையில ஒண்டிக்கிறான். ஊஹும் ஆக்கிரமிக்கிறான். அந்த வீட்டு ஓனரான பாட்டிகூட ஒரே சண்ட. அப்புறம் அந்த பாட்டியோட பாசத்தை – பொது நோக்கத்தை – அறிந்தவுடனே பாசம் காட்ட ஆரம்பிக்கிறான்.

இந்த காட்சிகளை எல்லாம் ரொம்ப சுவாரஸ்யமா சொல்லி இருக்காங்க..

குடிச்சுட்டு வந்து வீட்டு வாசல்ல இருக்கிற செடி வளர்க்கிற சட்டிய உடைச்சிடுற ஹீரோ, தன்னோட தவறை பிறகு புதிய சட்டி வாங்கி செடியை நடுறது.. ஒரு மலர்ற மாதிரியான காட்சி.

அந்த பாட்டியும் ஹீரோவும் போடுற சண்டை, அப்புறம் காட்டுற நேசம் அத்தனையும் சுவாரஸ்யம்.

படம் முழுக்க இவங்களோட காட்சிகள் வர்ற மாதிரி தோணினாலும் ஒட்டு மொத்த படத்துல இந்த காட்சிகள் குறைவுதான். திரைக்கதை மேஜிக்ல அப்படி ஒரு உணர்வை அற்புதமாக கொடுத்திருக்காரு இயக்குநர்.

ஹீரோவோட கல்லூரி கலாட்டாக்கள், காதல், வேலை தேடி அலையிறப்போ ஆங்கிலம் தெரியலேனா மரியாதை இல்லாதது.. ரசிக்கிறமாதிரி காட்சிகள் அமைச்சிருக்காங்க..

பிளாஷ் க்ல வர்ற, கீழ் வெண்மணி காட்சிகள் அத்தனை நேர்த்தி.
உரிய கூலி கேட்கும் விவசாயிகளை வீட்டில வச்சி பண்ணையார்கள் எரிக்கிறது.. அந்த பண்ணையார்களை இடதுசாரி போராளிகள் பழிவாங்குறது.. அவங்களோட தியாகம்.. எல்லாத்தையுமே பிரமிக்கிற மாதிரி சொல்லியிருக்காங்க.

ஹீரோ வெங்கடேஷ், கம்யூனிஸ போரளியா வர்ற சந்தோஷ் பிரதாப், பாட்டி ரஜினி சாண்டி இப்படி எல்லோருமே சிறப்பா நடிச்சிருக்காங்க.

ஜெயந்த் சேதுமாதவன் ஒளிப்பதிவு பிரமிக்க வைக்குது. கிராமத்து காட்சிகளாகட்டும், நகரத்து காட்சிகளாட்டும் சிறப்பு.. அதுவும் பிளாஸ்பேக் காட்சியில டோன் மாத்தி, அந்த காலத்துக்கே நம்மை அழைச்சுட்டு போயிடுறார்..

பிரசாந்த் பிள்ளை இசையில பாடல்கள் ரசிக்கவைக்குது. பி்ன்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்த்திருக்காரு.

தினேஸ் பழனிவேல் அறிமுக இயக்குநராம். அற்புதமான படத்தை கொடுத்திருக்காரு.

கொஞ்சம் கூட அலுக்காத திரைக்கதை. கவனத்தை ஈர்க்கிற- அதே நேரம் இயல்பான வசனங்கள்.

படத்தோட மையக்கரு ஒருபக்கம் இருந்தாலும்.. இன்னொரு விசயத்தையும் சொல்லணும்..

ஆரம்பத்தில ஹீரோ எப்பப்பார்த்தாலும் சிகரெட்.. எரிச்சல்தான் வருது..

ஆனா அவன் பொறுப்பு வந்தவுடனே சிகரெட், மதுவை விட்டுர்றான்.

அதாவது ஹீரோக்கள்னாலே மது, சிகரெட்.. இதில வெத்துப் பயலுகதாம்பா இந்த பழக்கத்தை எல்லாம் வச்சிருப்பானுங்க அப்படினு அறிவரையா இல்லாம ஆனா மனசுல பதியறமாதிரி.. சொல்லி இருக்காரு

கோடி கோடியை சம்பளம் வாங்குற நடிகர்கள், இயக்குவர்கள், பிரம்மாண்டம்கிற பேர்ல பெரிய செட்டுங்க, காதை அறையில இரைச்சல்னு படம் எடுக்கிற படுபாவிங்க இந்த படத்தை ஒருதடவை பார்க்கணும்..

‘நாம் வாழ்வது முக்கியமில்லை. யாருக்காக வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம்’ அப்படிங்கிற தத்துவத்தை
ரசிக்கும்படி சொல்லுது கதிர் திரைப்படம்.

இந்த படமே, மக்கள் நல்லா வாழ்றதுக்கான வழியை சொல்லியிருக்கு.