திருவண்ணாமலை
கார்த்திகை தீப திருவிழாவைமுன்னிட்டு திருவண்ணாமலையில் மகாதீபம் இன்று மாலை ஏற்றப்பட்டது.
திருவண்ணாமலையில் உள்ள ஸ்ரீஅருணாசலேஸ்வர் திருக்கோவில் கார்த்திகை திப திருவிழா கடந்த 14 ஆம் தேதி கொடியேற்றி தொடங்கப்பட்டது. உற்சவ மூர்த்திகல் தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர். இன்று அதிகாலை அருணாசலேஸ்வரர்
கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
இன்று கார்த்திகை தீபத்தை முன்னிடு மாலை தீபம் ஏற்றப்பட்டது. இதற்காக 2666 அடி உயரமுள்ளமலையில் மகாதீபம் அமைக்கப்பட்டிருந்தது. தீபம் ஏற்றுவதைக் காண லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர். மழையையும் பொருட்படுத்தாமல் அவர்கள் தீப தரிசனம் காண காத்திருந்தன்ர.
இன்று மாலை 6 மணிக்கு பக்தர்களின் அரோகரா முழக்கத்துடன் அண்ணாமலை மகா தீபம் ஏற்றப்பட்டது. கூடியிருந்த மக்கள் பக்தி பரவசம் அடைந்தனர்.