கொள்ளேகால்,

ர்நாடகாவில் நடைபெற்ற குண்டலுபேட்டை, நஞ்சன்கூடு தொகுதி இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

இன்று பிற்பகல் தேர்தல் முடிவு தெரியவரும். அடுத்த ஆண்டு கர்நாடகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில்  தற்போதைய இடைத்தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.

காங்கிரஸ், பா.ஜனதா ஆகிய இருபெரும் கட்சிகளும், மக்களிடையே தங்களது பலத்தைக் காட்ட ஒரு வாய்ப்பாக இந்த இடைத்தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது.

கடந்த 9–ந் தேதி இந்த 2 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடந்தது.  குண்டலுபேட்டையில் 250 வாகுச்சாவடிகளிலும், நஞ்சன்கூடுவில் 236 வாக்குச்சாவடிகளிலும் தேர்தல்கள் நடந்தன.

குண்டலுபேட்டை தொகுதியில் 87.10 சதவீத வாக்குகளும், நஞ்சன்கூடு தொகுதியில் 77.56 சதவீத வாக்குகளும் பதிவாகின.

ஆனால்,  மற்றொரு  கட்சியான ஜனதா தளம்(எஸ்) இந்த தேர்தலை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.